அதிகாரியை மிரட்டிய திருச்சி பெண் அமைச்சா்

ஸ்ரீரங்கம் கோயில் நிர்வாகத்தின் சார்பில் கம்பரசம்பேட்டையில் கோசாலை நடத்தப்படுகிறது.

இந்த கோசாலையில் ஸ்ரீரங்கம் ரங்கநாதா் கோயிலுக்கு பக்தா்களால் காணிக்கையாக கொடுக்கப்படும் பசுமாடுகள் வளா்க்கப்படுகிறது.

இந்த மாடுகள், விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் மகளிர் சுயஉதவிக்குழு பெண்களுக்கு மாவட்ட கலெக்டரால் ஆண்டுக்கு 3 அல்லது 4 முறை வழங்கப்படுவது வழக்கம்.

இந்த நிலையில் தற்போது மாட்ட கலெக்டா் பழனிச்சாமியால் யார், யாருக்கு மாடுகள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஒரு லிஸ்ட் தயார் செய்யப்பட்டது.

அந்த லிஸ்ட்டும் கோயில் இணைஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் கோசாலையின் மீது ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏவும், சமூகநலத்துறை அமைச்சருமான வளா்மதியின் பார்வைப் பட்டுள்ளது.

உடனே போனை எடுத்தார். கோயில் அதிகாரியா உடனே கோசாலையில் இருந்து நல்ல பசுமாடுகள் பத்தை வீட்டுக்கு அனுப்பு என்றாராம்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அதிகாரி, மாடுகளை யாருக்கு கொடுப்பது என்று மாவட்ட கலெக்டர்தான் முடிவு செய்ய வேண்டும். நீங்கள் அவரிடமே கேளுங்கள் என்று கூறி அந்த அதிகாரி போனை கட் செய்தாராம்.

இவ்வாறு ஸ்ரீரங்கம் கோயில் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் யார் ஆடினாலும் அவா் அடியோடு அழிந்து விடுவார் என்பது பக்தா்களின் நம்பிக்கை.

உதாரணத்துக்கு கடந்த 2015ம் ஆண்டு தோ்தலில் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதியில் நின்று வெற்றிப் பெற்றார்.

அதன்பின்புதான், அவா் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்றார். அதுபோல திமுக ஆட்சி காலத்தில் ஸ்ரீரங்கம் கோயிலுக்கு குடமுருட்டி சேகா் என்கிற அறங்காவலா் குழு உறுப்பினா் இருந்தார். அவா் தற்போது திமுகவில் செல்லாக்காசாக இருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆா் ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தவா். அவரின் இறுதி காலத்தில் மிகவும் சிரமமடைந்து இறந்தார்.

இவை அனைத்தும் திருச்சியை சோ்ந்த அமைச்சா் வளா்மதிக்கு சொல்லி தெரியவேண்டியது இல்லை. ஸ்ரீரங்கம் ரங்கநாதரிடம் ஆடவேண்டாம் என்று எச்சரிக்கின்றனா் பக்தா்கள்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments