அதிமுகவில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சி

பா.ஜ.க. ஆதரவுடன் அதிமுகவில் இன்னொரு அணி உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 22 ஆம் தேதி முதல் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.<இதனால் ஜெயலலிதாவின் அனைத்து பொறுப்புகளும் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கையில் ஒப்படைக்கப் பட்டது.<

அதிமுகவில் பிளவை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சி:-

இதற்கிடையே நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துறையைத்தான் பொறுப்பு முதல்வராக்க ஆளுநர் வித்யாசாகர் ராவ் மூலம் பா.ஜ.க முயற்சித்து வந்துள்ளது.

ஆனால் சசிகலா தரப்புக்கு இதில் உடன்பாடு இல்லை. மேலும் ஓபிஎஸ்ஸுக்கும் எந்தவித பொறுப்பும் வந்துவிடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் சசிகலாதரப்பு இருந்துவந்துள்ளது.

இந்த நிலையில் வேறு வழியில்லாமல் ஓ.பி.எஸ் கையில் அனைத்து பொறுப்புகளும் வந்தன. ஓ.பி.எஸ் கையில் பொறுப்பு இருந்தாலும் தம்பித்துரை ஆலோசனைப்படியே ஓ.பி.எஸ் செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதன் பின்னணியில் பா.ஜ.க. இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பா.ஜ.கவின் இந்த காய் நகர்த்தலாம் சசிகலா தரப்பு பீதியில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments