அதிமுக பொதுச்செயலாளர் யார்?:பொன்னையன் விளக்கம்!

அதிமுக பொதுச்செயலாளர் யார்? :பொன்னையன் விளக்கம்.

அதிமுக பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்கப்படலாம் என்று தகவல்கள் பரவி வரும் நிலையில் விரைவில் தேர்தெடுக்கப்படுவார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் செய்தித் தொடர்பாளர் பொன்னையன் கூறியதாவது:

அதிமுக பொதுச்செயலாளர் யார் என்பது குறித்து வதந்தி பரவுகிறது. அதிமுக கட்டுக்கோப்பான இயக்கம். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்.

ஜெயலலிதாவின் அணுகுமுறையை தொடர்ந்து பின்பற்றுவோம். அதிமுகவின் புதிய பொதுச்செயலர் விரைவில் ஒருமனதாகவே தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்காக அதிமுகவில் போட்டி எதுவும் இல்லை. அப்படியான செய்திகள் அனைத்துமே வதந்தி” என்றார்.

மேலும் ஜெயலலிதாவுக்கு மிகச் சிறந்த மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அவரது மரணத்துக்கு இவர்தான் அவர்தான் காரணமென பொறுப்பாக்குவதை ஏற்க முடியாது என்றார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments