அந்த குறைபாடு உள்ளவர்கள் மக்கா சோளத்தை சாப்பிடலாமா?

மக்கா சோளத்தை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் நமக்கு கிடைக்கின்றது. இது தானிய வகையைச் சார்ந்தது. சோளத்திற்கு சுவையும் சத்தும் அதிகம்.

இதில் நார்சத்து அதிகமாக உள்ளது. கொழுப்பு சத்து குறைவு. நார்சத்து மிகுதியின் காரணமாக ஜீரணத்திற்கு சிறந்தது.

மேலும் பல சத்துக்களை கொண்டுள்ளது. கொழுப்பு சத்து ரத்தத்தில் சேரவிடாமல் தடுத்து நிறுத்துகின்றது. மலச்சிக்கல் நீக்குகின்றது. குடல் சம்பந்தமான நோய் பாதிப்புகள் தவிர்க்கப்படுகின்றன.

மூலம் பாதிப்பு உள்ளவர்கள் இதனை சாப்பிடுவது சிறந்தது. வைட்டமின் பி 12 குறைபாடும், பேஃலிக் ஆசிட் சத்து குறைபாடும் ரத்தசோகையை ஏற்படுத்தும். இரும்புசத்து குறைபாடும் ரத்த சோகையினை ஏற்படுத்தும். சோளம் இவற்றினைத் தவிர்க்கும்.

அதிக கார்போஹைடிரேட் கொண்டதினால் சோளம் நிறைந்த சக்தியினை அளிக்கின்றது. மூளை, நரம்பு மண்டலம் நன்கு செயல்பட உதவுகின்றது. விளையாட்டு வீரர்களுக்கு ஏற்ற உணவு மக்காச்சோளம்.

கெட்ட கொழுப்பினை நீக்குகின்றது. வைட்டமின் ‘சி’ சத்து மிகுந்தது. எடை குறைந்தவர்கள் இதனை சாப்பிட்டால் எடை அதிகரிக்கலாம்.

நார்சத்து உள்ளதால் சர்க்கரை நோய் தவிர்க்கப்படும். சர்க்கரை நோயாளிகள் இதனை சிறிதளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை அளவு  கட்டுப்படும். உடல் தசை, தசை நார்கள் வலுவடையும்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments