ஆண்மை குறைவு மருந்துகள் – ஆண்கள் பக்கம்

ஆண்மை குறைவு மருந்துகள் என்னென்ன எவ்வாறு சாப்பிட வேண்டும்:-

நமது முந்தைய ஆண்மை குறைவு குறித்த கட்டுரைகளான ஆண்மை குறைவு என்றால் என்ன? , ஆண்மை குறைவு அறிகுறிகள் – எப்படி அறிவது ? ஆகியாவற்றின் தொடர்ச்சியாக ஆண்மை குறைவு மருந்துகள் குறித்து விளக்குகிறது இக்கட்டுரை.

டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் குறைவாலே இந்த ஆண்மைக் குறைவு வருகிறது, எனவே டெஸ்டோஸ்டிரோன் அதிகம் உள்ள உணவுகள் என்னென்ன என பார்ப்போம்.

முட்டை:-

ஆண்கள் அன்றாட உணவில் முட்டையை தவறாமல் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஏனெனில் முட்டையில் உள்ள வைட்டமின் டி ஆனது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்.

மிக முக்கியமாக முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது.

எனவே தினமும் ஒரு முட்டையை ஆண்கள் உணவாக உண்பது நல்லது.

பால்:-

பால் ஒவ்வொருவரும் அவசியம் சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களில் ஒன்று.

பாலில் கால்சியம் மட்டுமின்றி, வைட்டமின் டி சத்தும் அதிகம் உள்ளது.

இதனால் எலும்புகள் வலிமையடைவதோடு, ஆண்களுக்கு ஏற்படும் டெஸ்டோஸ்டிரோன் குறைபாடும் நீங்கும்.

பூண்டு:-

ஆண்கள் சமையலில் தவறாமல் பூண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால், கார்டிசோல் அளவுகள் குறைந்து, டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும்.

அன்னாசிப்பழம்:-

உணவு சாப்பிடுவதற்கு முன் அன்னாசிப் பழத்தை ஆண்கள் சிறிது சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள புரோமெலைன் என்னும் நொதி டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, உணவை எளிதில் செரிக்க உதவும்.

ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை ஆண்கள் அவ்வப்போது உட்கொண்டு வர வேண்டும்.

ஏனெனில் இதில் உள்ள வைட்டமின் சி மன அழுத்த ஹார்மோன் அளவை குறைத்து, டெஸ்ரோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும்.

எளிய மருந்து 1:-

கால் கிலோ விதை நீக்கிய பேரீச்சம்பழம் மற்றும் பத்து ஏலக்காய் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

அதனுடன் நானூறு மில்லி தேன் சேர்த்து புட்டியில் அடைத்து வைக்கவும்.

இந்த தேன் பேரீத்தம் பழக் கலவையை காலை, மதியம், மாலை, இரவு என ஒரு மண்டலம் ( நாற்பத்தி ஒன்று ) நாட்கள் சாப்பிட்டு வர, ஆண்மைக் குறைவு நீங்கி குணம் கிடைக்கும்.

எளிய மருந்து 2:-

அமுக்கறான் கிழங்கு 700 கிராம்
நிலபனை கிழங்கு 700 கிராம்
சுக்கு 70 கிராம்
மிளகு 70 கிராம்
திப்பிலி 70 கிராம்
சித்திர மூலம் 70 கிராம்
ஏலம் 35 கிராம்
கிராம்பு 35 கிராம்
சிறுனாகபூ 35 கிராம்
ஜாதிக்காய் 35 கிராம்
லவங்க பத்திரி 35 கிராம்
சவ்வியம் 72 கிராம்
பேரிச்சம் காய் (விதை நீக்கியது) 525

மேற்கூறிய பொருட்களை நாட்டு மருந்து கடையில் வங்கி கொள்ளவும்.

அவற்றை நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும்.

பிறகு மூன்று லிட்டர் சுத்தமான பசும் பாலில் ஓன்றரை கிலோ நாட்டு வெல்லத்தை கரைத்து நன்றாக பாகு பதம் வரும்வரை மிதமான சூட்டில் காய்ச்சி அதில் இந்த பொடிகளை போட்டு நன்றாக கிளறி இறக்கிவிடுங்கள்.

நன்றாக சூடு ஆறியபிறகு அதில் 50 மில்லி தேனையும், 700 மில்லி நெய்யையும் போட்டு நன்றாக கிளறி காற்று போகாத ஒரு பாட்டலில் இட்டு மூடி வைத்துவிடுங்கள்.

ஐந்து நாட்கள் கழித்து ஒரு கோலிகுண்டு அளவு மூன்று நேரம் உணவுக்கு முன்னால் 90 நாட்கள் சாப்பிட்டு வர ஆண்மை குறைவு நீங்கும்.

இது போன்ற உடல் நலம் சார்ந்த கட்டுரைகளை உடனுக்குடன் பெற கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments