இந்திய கபடி அணி ஆதங்கம் ? எதனால் தெரியுமா

இந்திய கபடி அணி ஆதங்கம்>

இந்தியாவிற்காக உலககோப்பையை வென்றும் எங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை

இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கும் முக்கியத்துவம் உலககோப்பையை நாங்கள் வென்றும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று இந்திய கபடி வீரர் அஜெய் தாக்கூர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் குஜாராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற உலகக்கோப்பை கபடி தொடரில் இந்திய அணி ஈரானை வீழ்த்தி உலக சாம்பியன் பட்டம் பெற்றது.

இது இந்திய அணி உலகக்கோப்பையை வெல்வது 8வது முறையாகும்,மேலும் தொடர்ந்து மூன்று உலகக்கோப்பையையும் இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்நிலையி இந்தியா உலகக்கோப்பையை வெல்ல பெரிது கைகொடுத்த இந்திய வீரர் அஜெய் தாக்கூர் இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் எங்களுக்கு வழங்கப்படவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இந்திய கபடி அணி வீரர் அஜெய் தாக்கூர் கூறியதாவது:-

சொந்த மண்ணில் எதிரணிகளை வீழ்த்தி உலகக்கோப்பை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால் அதே நேரத்தில் நமது நாட்டில் கிரிக்கெட் விளையாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம் கபடிக்கு வழங்கப்படவில்லை.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments