இந்து பக்தர்களுக்கு அடிப்படை வசதி இஸ்லாமியர்கள் கோரிக்கை!

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள முருகன் கோவில் தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் பிரபலம்.

திருப்பதிக்கு அடுத்தபடியாக அதிக வசூலை குவிக்கும் கோவிலாகவும் உள்ளது.

இந்நிலையில் பழனியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ.  கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் முருகன் கோவில் பக்தர்களுக்கு குடிநீர், சாலை வசதிகள் உள்ளிட்டவற்றை நிறைவேற்றி தர வேண்டும் என வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றினர்.

இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் நிர்வாகிகள், தமீம் அன்சாரி, முபாரக், முஜிபுர் ரஹ்மான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்ற முஸ்லீம் அமைப்பின் மாவட்டத் தலைவர் கைசரும் கலந்து கொண்டார்.

எஸ்.டி.பி.ஐ. கட்சியில் பல்வேறு மதத்தினர் இருந்தாலும், இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள நிலையில், பழனிக்கு வரும் பக்தர்களின் நலனுக்காக குரல் கொடுத்தது மத சகிப்புத்தன்மையை எடுத்துக்காட்டுவதாக உள்ளது.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments