Home உடல் நலம் ~ Tamil Health உங்களுக்கு அலர்ஜியா ? இனி கவலை வேண்டாம்

உங்களுக்கு அலர்ஜியா ? இனி கவலை வேண்டாம்

13
0
உங்களுக்கு அலர்ஜியா
அலர்ஜியா? கவலையை விடுங்க

உங்களுக்கு அலர்ஜியா ? இனி கவலை வேண்டாம்

ஒவ்வொருவர் உடலுக்கும் ஒத்துக்கொள்ளாதது பொருட்கள் உண்டு. அதைச் பயன்படுத்தும் போதோ அல்லது உணவுக்காக சேர்த்துக் கொண்டாலும் அலர்ஜி ஏற்படும். இதைக் காணாக்கடி என்பர்.

இதனால் உடலில் அரீப்பும், தடிப்பும் ஏற்படும்.. இதைப்போக்க, சிறிது வேப்பிலையுடன் 7 அல்லது 8 மிளகை சேர்த்து வாயில் போட்டு நன்றாக கசகச என்று மென்று விழுங்க வேண்டும். இவ்வாறு நாள் ஒன்றுக்கு 3 வேளை சாப்பிட்டால், அரீப்பும் தடிப்பும் மறையும்.

உங்களுக்கு அலர்ஜியா :-

எக்காரணத்தினால் தடிப்பு மற்றும் அலர்ஜி ஏற்பட்டிருந்தாலும், செய்ய வேண்டிய முதலுதவி.

மருதாணி இலையின் சாற்றைப் பிழிந்து, தேங்காய் எண்ணெயில் கலக்கி நன்கு சுண்டவைத்து அதை உடலெங்கும் பூச கட்டுப்படும்.

அலர்ஜி என்றதும் மஞ்சளும், கருவேப்பிலையும் ஞாபகத்துக்கு வர வேண்டும். இரண்டையும் நன்றாக அரைத்து, ஒரு மாதம் சாப்பிட்டு வர, அலர்ஜி, நமைச்சல் கட்டுப்படும்.

தூசி அலர்ஜி:-

சுக்கு, மிளகு, திப்பிலி மூன்றையும் சம அளவு எடுத்து இதில் சுக்கு தவிர மற்ற இரண்டையும் ஒரே பக்குவத்தில் வறுத்து, மூன்றையும் பொடி செய்து சலித்துக் கொண்டு, குப்பை மேனி என்னும் மூலிகைச் சாறை இந்தப் பொடியில் விட்டு அரைத்து, வெண்ணெய் போல் ஆனதும், ஒரு சுண்டைக்காய் அளவு மாத்திரைகளாய் உருட்டி, நிழலில் உலர்த்திக் கொண்டு, காலை- மாலை இரு வேளையும் சாப்பிட்டு வந்தால், தூசி அலர்ஜி குணமாகும்.

சில சிப்ஸ் வகைகள், சைனீஸ் உணவு வகைகளான பிரைட் ரைஸ் மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றில் அஜினமோட்டோ உப்பு சேர்க்கப்படுவதால் அவற்றை உண்பதை தவிர்க்க வேண்டும்.

அலர்ஜி என்றால் என்ன? எவ்வாறு தடுப்பது.

எண்ணெயில் பொரித்து எடுக்கப்படும் பஜ்ஜி, போண்டா, பூரி ஆகியவற்றையும் தவிர்ப்பது நல்லது. அலர்ஜிக்கு ஒத்துக்கொள்ளாத உணவு வகைகளை தவிர்ப்பதன் மூலம் அதனால் உண்டாகும் தொல்லைகளை தவிர்க்க முடியும்.

சீரகத்தை வறுத்து பொடியாக்கி தினமும் தண்ணீரில் போட்டு காய்ச்சி குடித்து வருவதன் மூலம் அலர்ஜி ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

மேலும் புதினாவை வாரத்தில் 3 முறை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம். மோரில் உப்பு கலந்து வெள்ளரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டிப் போட்டு சாப்பிடுவதன் மூலம் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.

இது போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments