உடல் பளபளப்பு ஆக வேண்டுமா ?

உடல் பளபளப்பு ஆக வேண்டுமா ?

53
0
உடல் பளபளப்பு

உடல் பளபளப்பு பெறவேண்டுமா?

நீங்கள் உடல் பளபளப்பு ஆக விருப்பப் படுகீர்கள் எனில் இதைப் படியுங்கள்.

ஆரஞ்சு பல தோலை காய வைத்து ஒரு கப் எடுத்துக்கொள்ளவும், அதனுடன் சம அளவு காய்ந்த ரோஜா இதழ்களை சேர்த்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக்கவும்.

மேலும் அதோடு கடலைமாவு இரண்டு கப் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும். தினமும், இந்த கலவையிலிருந்து இரண்டு ஸ்பூன் எடுத்து, அதோடு சிறிதளவு பால் ஆடை சேர்த்து நன்கு குழைத்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, காய்ந்ததும் பச்சை தண்ணீரில் சோப்பு போடாமல் கழுவி விடவும். இவ்வாறு செய்வதால் முகப் பளபளப்பு அடையும்.

பாலை காய்ச்சும் போது அதிலிருந்து வரும் ஆவியில் முகத்தை காட்டி , அந்த வியர்வை துடைக்காமல் காயவிட்டு , அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முகம் பளபளப்பாகும்.

தக்காளியை மிக்சியில் போட்டு அதனை ஜூஸாக்கி அதை முகத்தில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கடலைமாவு போட்டு கழுவினால் முக பளபளப்பு அடையும்.

சிறிதளவு வெண்ணை எடுத்து நன்கு குழைத்து முகத்தில், முழங்கை, கழுத்து போன்றவற்றில் தேய்த்து சிறிது நேரம் கழித்து கடலை மாவு போட்டு கழுவினால் மேனி மிருதுவாகும். கண்ணுக்கு கீழ் உள்ள கருவளையம் மறையும்.

கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி பத்து நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.

சம அளவு கேரட் சாறு, ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சை பழச்சாறு மற்றும் பன்னீர் ஆகியவற்றை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கலந்து முகம் மற்றும் கழுத்தில் பூசி சிறிது நேரம் ஊற வைத்து பிறகு கழுவி வந்தால் முகம் பளபளப்பாகும்

எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி இரவு படுக்கச் செல்லும் முன் முகப்பரு உள்ள இடத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீர் கொண்டு முகத்தைக் கழுவி வந்தால் முகப்பரு குறையும். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் செய்து வந்தால் முகப்பரு குறையும்.

கடற்சங்கை எடுத்து நன்கு சுத்தம் செய்து அதை பசும்பால் விட்டு அரைத்து பருக்கள் மீது பூசி வந்தால் இரண்டே நாட்களில் பருக்கள் குறையும்.

புதினா இலைகளை அரைத்துச் சிறிதளவு தேன், எலுமிச்சை சாறு சேர்த்துக் குழைத்து முகத்தில் பூசி வந்தால் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பப்பாளிப் பழத்தை நன்கு பிசைந்து முகம், கழுத்து, கைகளில் பூசி 30 நிமிடங்கள் கழித்து முகம் கழுவ முகப்பொலிவு அதிகரிக்கும்.

எலுமிச்சை சாறு பிழிந்த நீரில் ஆவி பிடித்தல், முகத்தில் இருக்கும் மாசினை அகற்றி பளபளப்பாக்க உதவும்.

நன்கு கனிந்து தூக்கி எறியும் நிலையில் உள்ள வாழை பழத்தை கூழாக்கி அதை முகத்தில் தேய்த்து ,அரை மணி நேரம் கழித்து முகம் கழுவினால் முக பளபளப்பு கூடும்.

பெண்கள் கஸ்தூரிமஞ்சள், பூலாங்கிழங்கு, ஆகிய இரண்டையும் அரைத்து முகத்தில் பூச முகம் பளபளப்பாக இருக்கும்.

தோல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், கொத்தமல்லி இலையில் சாறு எடுத்து அதில் சிறிதளவு கஸ்தூரி மஞ்சள்தூளைக் கலந்து தோல் மீது தடவி வந்தால் தோல் மிருதுவாகவும் பளபளப்பாகவும் மாற ஆரம்பிக்கும்.

பாதாம் பருப்பை அரைத்து தேன், எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவிவர முகம் பளப்பளப்பாகும்.

உருளைக்கிழங்கு சாறுடன் கடலைமாவையும் சேர்த்து முகத்தில் தேய்த்து வந்தாலும் முகம் பொலிவு பெறும்.

கஸ்தூரி மஞ்சள் தூளை பன்னீரில் கலந்து வெயிலில் வைத்து சூடாக்கி, அதை முகத்தில் தேய்த்து வந்தால் முகப்பருக்கள் மற்றும் அவை வந்த அடையாளங்கள் மாயமாகிவிடும்

இது போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments