உயர் ரத்த அழுத்தத்திற்கு தர்பூசணி

உயர் ரத்த அழுத்தத்திற்கு சிறந்த மருந்து தர்பூசணி

மாரடைப்பு, ஸ்ட்ரோக் போன்ற பயங்கர நோய்களுக்கு முழுமுதற்காரணமாக விளங்கும் உயர் ரத்த அழுத்தத்தை தர்பூசணிப்பழம் குறைக்கிறது என்று புளோரிடா மாகாண உணவு  ஆராய்ச்சி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தர்பூசணி அல்லது வாட்டர்மெலான் என்று அழைக்கப்படும் பழச்சாறை ஒரு 6 கிராம் அளவுக்கு எடுத்து 6 வாரங்களுக்கு அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வு பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான முந்தைய நிலைமைகள் முதல் முழுதாக உயர் ரத்த அழுத்தம் இருப்பவர் வரையில் இந்த வாட்டர்மெலான் சிகிச்சை மிக்க பலனளிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மிகப்பெரிய அளவில் சாலையோரம் வைத்து விற்கப்படும் இந்த அழகான பழத்தில் அமினோ ஆசிட் L-ஸிட்ருலைன் உள்ளது. இது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்கிறது.

இந்த L-ஸிட்ருலைன் என்ற அமினோ ஆசிட் L-ஆர்ஜினைன் என்ற வேறொன்றாக உடலில் மாற்றமடைகிறது. ஆனால் இந்த L-ஆர்ஜினைனை நேரடியாக உட்கொண்டால் வாந்தி ஏற்படுவது உறுதி. மேலும் குடல் பிரச்சனைகளும், சில வேளைகளில் வயிற்றுப்போக்கும் ஏற்படும்.

வயதானவர்கள், நீண்ட நாளைய உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் என்று அனைவருக்கும் வாட்டர்மெலான் சிகிச்சை பயனளிப்பதாக இந்த ஆய்வு நிரூபித்துள்ளது, இந்த ஆய்வு அமெரிக்க ரத்த அழுத்த இதழில் வெளியிடப்பட்டுள்ளது

கோடைகாலங்களில் வெப்பத்தை தணிக்க தர்பூசணியை பலர் விரும்பி சாப்பிடுகிறார்கள். இது கோடைக்கு மட்டுமல்ல எப்போது சாப்பிட்டாலும் உடல்நலத்துக்கு ஏற்றது என்பதை அமெரிக்க பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த தர்பூசணி பழச்சாற்றில் `சிட்ருல்லின்’ என்ற மகத்துவம் மிக்க ரசாயன பொருள் அடங்கி இருக்கிறது என்றும், அது இருதய கோளாறு, எடை அதிகரிப்பு ஆகியவற்றை குறைக்க உதவுகிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

ஆகவே இந்த உயர் ரத்த அழுத்தத்திற்கு தர்பூசணி தினமும் ஒரு துண்டு சாப்பிட்டு வரலாம் என யோசனை தெரிவிக்கின்றார்கள்.

தர்ப்பூசணியில் உள்ள ஃபைட்டோ – நியூட்ரியன்ட்ஸ் என்ற சத்துக்கள், உடம்பை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்திருக்கின்றன.இதில் உள்ள மூலப்பொருட்கள் ரத்தம் வழியாக சென்று நரம்புகளுக்கு கூடுதல் சக்தியை தருகிறது.

அதாவது, ஒரு வயாக்ரா மாத்திரையில் அடங்கியுள்ள சக்தி, தர்பூசணி பழத்திலும் இருப்பது தெரியவந்துள்ளது.

தர்பூசணியில் வெறும் தண்ணீர் சத்துதான் உள்ளது. அதில் வேறு சத்து எதுவும் இல்லை என்று கூறி வந்தவர்களுக்கு இந்த புதிய தகவலை இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். தர்பூசணிக்கு `ஆசையை’ அதிகரிக்கும் ஆற்றலும் கூட உள்ளதாக அவர்கள் கூறுகிறார்கள்.

உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும்.

அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி. இதை மிக்ஸியிலிட்டு அரைத்து சாறு எடுத்துக் குடிக்கலாம். ஊட்ட சத்து மிகுந்த பானம் இது.<

மனித உடலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் சத்து பொருள்கள் சில காய்கறிகளிலும், பழங்களிலும் உள்ளன. தர்பூசணியில் அதுபோல் உள்ள `சிட்ரூலின்’ என்ற சத்துபொருள், வயாகராவை போல் ரத்த நாளங்களை விரிவடைய செய்து, ரத்த ஓட்டத்தை அதிகரிக்குமாம்.

தர்பூசணியை சாப்பிட்ட பிறகு, ஏற்படும் வேதியல் மாற்றம் காரணமாக `சிட்ரூலின்’, `அர்ஜினைனாக’ எனும் வேதிப்பொருளாக மாற்றப்படுகிறது. அது இதயத்துக்கும், ரத்த ஓட்டம் சம்பந்தமான உடல் உறுப்புகளையும் ஊக்குவிக்கிறது.

இந்த சிட்ரூலின்-அர்ஜினைன் வேதி மாற்றமானது, சர்க்கரை நோய்க்காரர்களுக்கும், இதய நோயாளிகளுக்கும் கூட நன்மை பயக்குமாம்.

இதில், முக்கியமானது என்னவென்றால், தர்பூசணியில் உள்ள மேல்பகுதி அதாவது, வெண்மை பகுதியில்தான் ஆண்மையை அதிகரிக்கும் சத்து உள்ளதாம்.

இது தெரிந்தால் நம்மவர்கள், வாழைப்பழத்தை விட்டு தோலை மட்டும் சாப்பிடுவதைப் போல், தர்பூசணியின் சிவப்பு பகுதியை விட்டுவிட்டு வெறும் வெள்ளை பகுதியை மட்டுமே சாப்பிடுவார்கள் என்பது நிச்சயம்.

பிளாஸ்டிக் பாட்டில் உபயோகித்தால் ?

உயர் ரத்த அழுத்தத்திற்கு தர்பூசணி ர்பூசணியின் பயன்கள்:

கோடைக் காலத்தில் கிடைக்கும் தர்பூசணிப் பழம், உடலுக்குக் குளிர்ச்சியை தருவதோடு, இரும்புச் சத்தும் நிறைந்ததாகும்.

இதில் இருக்கும் இரும்புச் சத்தின் அளவு, பசலைக் கீரைக்கு சமமானதாகும். மிகச்சிறந்த vitamin C யும் vitamin A (ஒரு துண்டு பழத்தில் 14.59 mg of vitamin C and 556.32 IU of vitamin A) இதில் உண்டு.

இதைவிட தேவையான அளவு vitamin B6 ம் vitamin B1 ம், கனியுப்புக்களான potassium and magnesium மும் உண்டு.

எனவே உயர் ரத்த அழுத்தத்திற்கு தர்பூசணி உதவிகரமாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் கிடைக்கும்போது எல்லாம் சாப்பிடுங்கள்.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Comments

comments