உயிருக்கு விலை மதிப்பு இல்லை

உயிருக்கு விலை மதிப்பு இல்லை.

உயிருக்கு விலை என்ன என்பதை நமக்கு புரிய வைக்கும் இந்த துறவியின் கதையை நீங்க தெரிந்து கொள்ளுங்க

ஏழ்மையில் உள்ள ஒருவர் துறவி ஒருவரை பார்க்க வந்தார். அவர் குறுவை பார்த்து நான் பெரும் ஏழை என்னிடம் உயிரைத்தவிர வேறு ஒன்றும் இல்லை. நான் செல்வந்தராக மாற என்ன வழி என்று கேட்டான்.

அதற்கு குரு அவனிடம், நான் 50,000 ரூபாய் தருகிறேன். உன்கைகளை, என்னிடம் வெட்டிக்கொடு என்று சொன்னார்.

அவன், என்னால் 50,000 ரூபாய்க்காக என் கைகளை இழக்க முடியாது என்று கூறினான்.

சரி, நான் உணக்கு 75,000 ரூபாய் தருகிறேன். உன் கால்களை கொடு என்றார். அதற்கும் அவன் ஒப்புக்கொள்ளவில்லை.

சரி, உனக்கு இருபதுலட்சம் வேண்டுமென்றாலும் தருகிறேன். உண் உயிரைக்கொடு என்றார்.

அதற்கு அந்த ஏழை, என்னால் நிச்சயம் நீங்கள் சொல்வதை செய்ய முடியாது என்று கூறினான்.

அதைக்கேட்ட அந்த குரு அவனிடம், உன்னிடம் உயிரைத் தவிர வேறு எந்தச் சொத்தும் இல்லை.
உயிருக்கு விலை மதிப்பு

மேலும் எவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தாலும் கொடுக்க விரும்பாத விலை மதிப்பற்ற உயிரை கொண்டுள்ள நீ எவ்வாறு ஏழை ஆக முடியும்.

ஆகவே, நீ தன்னம்பிக்கையுடன் உழைத்து வாழ்க்கையில் முன்னேறு என்று கூறினார்.

விலைமதிப்பில்லாத நம் தன்நம்பிக்கை ஒன்று போதும் வாழ்வை ஜெயிக்க – உயிருக்கு விலை மதிப்பு

இது போன்ற செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments