உள்ளாட்சித் தேர்தல் இல்லை : உயர் நீதிமன்றம் தீர்ப்பு

உள்ளாட்சித் தேர்தல் இப்போதைக்கு இல்லை சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

உள்ளாட்சித் தேர்த ரத்து மேலும் நான்கு வாரங்களுக்கு தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என்பதால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக எம்பி ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி கிருபாகரன், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டதோடு, தேர்தலை டிசம்பர் மாதம் இறுதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறியிருந்தது.

உள்ளாட்சித் தேர்தல் – தடை நீடிக்கும்:-

இதனை எதிர்த்து தமிழக தேர்தல் ஆணையம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இது குறித்த விசாரணை இன்று நடைபெற்றபோது, இருதரப்பாரின் வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு தொடரும் என்று உத்தரவிட்டார்.

மேலும், இதுதொடர்பாக திமுக, தமிழக அரசு பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்தார்.

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments