Home உடல் நலம் ~ Tamil Health ஊறுகாய் சாப்பிடுவது ஆபத்தா?

ஊறுகாய் சாப்பிடுவது ஆபத்தா?

22
0
ஊறுகாய் சாப்பிடுவது ஆபத்தா?
ஊறுகாய் சாப்பிடலாமா?

ஊறுகாய் சாப்பிடுவது ஆபத்தா?

நாம் உணவு உண்ணும் போது முக்கியமாக உணவுடன் சேர்த்து எடுத்துக் கொள்ளப்படும் பிரபலமான உணவுப் பொருள் ஊறுகாய்.

தினமும் ஊறுகாய் சாப்பிடுவது ஆபத்தா?

பல வகையான ஊறுகாய் நிறைய எண்ணெய், மசாலா பொருட்கள் மற்றும் உப்பு சேர்த்து செய்வதால், மிகவும் சுவையாகவும், கார சாரமாகவும் இருக்கும். அதனால் எல்லோரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.

ஊறுகாய் சுவை மிகுந்ததாக இருந்தாலும் அன்றாடம் இதை உட் கொள்ளும் போது பல உடல் நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அன்றாடம் சாப்பிடுவதை தவிர்ப்பதோடு, வீட்டிலேயே தேவைப்பட்டால் ஆரோக்கியமான முறையில் ஊறுகாயை செய்து சாப்பிடுங்கள்.

ஊறுகாயை தொடர்ந்து உட் கொண்டு வரும் போது, ஊறுகாயில் உள்ள சாறானது வயிற்றில் பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதில் அடி வயிற்றில் வலி, பிடிப்புக்கள் மற்றும் சில சமயங்களில் வயிற்றுப் போக்கை கூட உண்டாக்கும்.

உலகின் பல நாடுகளிலும் ஊறுகாய் பயன்படுத்தப்படுகின்றன. தென்னிந்தியர்களுக்கு தயிர் சாதத்திற்கு ஊறுகாய் என்றால், வட இந்தியர்கள் சப்பாத்திக்கே ஊறுகாய் தொட்டுக் கொண்டு சாப்பிடுவார்கள்.

கிடைக்கும் அனைத்து வகைக் காய்களிலும் ஊறுகாய் தயாரிக்கப்படுகின்றன. புளிப்பு சுவையுடன் கூடிய காய்கள் இதற்கு அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. எலுமிச்சை, மாங்காய் ஊறுகாய் இந்தியா முழுவதும் பிரபலமானது.

முறையாக பாதுக்காக்கப்பட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும் ஒரு பண்டம் இது. அதேசமயம், கவனக்குறைவாக இருந்தால் ஒரே நாளிலேயே கெட்டுப்போய்விடும்.

ஊறுகாயை காற்றுப்புகாத கண்ணாடி, பீங்கான் பாத்திரங்களில் அடைத்து வைத்தல் நல்லது. கண்ணாடி, பீங்கான் கரண்டிகளை எடுப்பதற்கு பயன்படுத்தினால் ஊறுகாய் விரைவில் கெட்டுப்போகாது.

ஈரம் பட்டால் விரைவில் கெட்டுப்போகும். எப்போதும் எண்ணெய்யில் மூழ்கி இருக்குமாறு செய்வதன் மூலம், ஒரு சில ஊறுகாய்களை பூஞ்சை பிடிக்காமல் காக்கலாம்.

ஊறுகாயில் மசாலா பொருட்கள் அதிக அளவில் சேர்ப்பதால், அவற்றை தொடர்ந்து எடுத்து வர, அல்சர் பிரச்சனையை சந்திக்கக்கூடும். எனவே சாதாரணமாக அதிக அளவில் காரம் உட்கொள்வதை தவிர்ப்பதோடு, ஊறுகாயை அதிகம் எடுப்பதையும் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாயில் அதிக அளவில் உப்பு இருப்பதால், இரத்த அழுத்தமும் அதிகரிக்கும். ஆகவே இரத்த அழுத்தம் உள்ளவர்கள் ஊறுகாயை தவிர்ப்பதோடு, இரத்த அழுத்தம் இல்லாதவர்கள் அன்றாடம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருளான சர்க்கரை சேர்க்கப்பட்டிருப்பதால், நீரிழிவு இருப்பவர்கள், ஊறுகாயை அறவே தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் மோசமான நிலைமையை அவர்கள் சந்திக்கக்கூடும்.

ஊறுகாய், அப்பளம் போன்றவை உப்பு அதிகம் உள்ள உணவுகளாதலால் மிகை இரத்த அழுத்தம், சிறுநீரகச் செயலிழப்பு, இதயச் செயலிழப்பு உள்ள நோயர்கள் ஊறுகாயைத் தவிர்க்க வேண்டும்.

ஊறுகாயில் எண்ணெய் அதிகம் சேர்ப்பதால், அவை இரத்தத்தில் உள்ள ட்ரை கிளிசரைடுகளின் அளவை அதிகரித்து இதய நோய்க்கு வழிவகுக்கும்.

ஊறுகாயில் பதப்படுத்தும் பொருட்கள் மற்றும் அதிக அளவிலான உப்பு சேர்க்கப்பட்டிருப்பதால், அவற்றை அன்றாடம் எடுத்து வரும் போது, அவை உடலில் நீர்த்தேக்கத்தை ஏற்படுத்தும். இதனால் வயிறு எப்போதும் உப்புசமாக இருப்பது போன்ற உணர்வை உணரக்கூடும்.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Please Like this Post

Kindly Share our Page

Visit Our Website Reuglarly (y)

Comments

comments