Home Tamilnadu News என்னது பசு மனிதர்களுக்கு தாயா? முட்டாள்களே – கட்ஜூ பொளேர்!

என்னது பசு மனிதர்களுக்கு தாயா? முட்டாள்களே – கட்ஜூ பொளேர்!

6
0

பசுவை கோமாதா என்று அழைப்பவர்கள் முட்டாள்கள், ஒரு விலங்கு எப்படி மனிதர்களின் தாயாக முடியும் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கேள்வி எழுப்பினர்.

ஒரு விலங்கானது எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்? பசுவை கோமாதா என்பவர்கள் முட்டாள்கள் என்று உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

பாஜக ஆட்சியை கைப்பற்றிய  மாநிலங்களிலும் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கிலான மாட்டிறைச்சிக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டன.

மேலும் மாடுகளை கொல்பவர்களின் முட்டிகள் உடைக்கப்படும் என்ற கருத்துகளையும் பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர்.

இது குறித்து மார்கண்டேய கட்ஜூ தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில், நாய், குதிரை போன்று பசுவும் வெறும் விலங்கு தான்.
பசுவை கோமாதா என்று அழைப்பவர்கள் முட்டாள்கள்.

ஒரு விலங்கு எப்படி மனிதர்களின் தாயாக இருக்க முடியும்?

எருது, ஆடு மற்றும் ஒட்டக பாலை கூட குடிக்கிறோம். அவைகளும் நமக்கு தாயா? என்று முன்னாள் நீதிபதி கட்ஜூ கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments