தூத்துக்குடி தொழிற்சாலைகள் ரூ.95 கோடி குடிநீர் கட்டணம் பாக்கி

ஒரு லிட்டர் தண்ணீர் ஒரு பைசாவிற்கு கொடுத்தும், தூத்துக்குடி தொழிற்சாலைகள் ரூ.95 கோடி வரை குடிநீர்   கட்டணம் பாக்கி வைத்துள்ளது.

தூத்துக்குடியில் இயங்கும் தொழிற்சாலைகளுக்கு  தேவையான தண்ணீர்  1974ம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றின் அணைக்கட்டில் இருந்து சிறிய அளவில் எடுக்கப்பட்டது.

பின்னர் தூத்துக்குடியில் பெருகிய தொழிற்சாலைகளால் இத்திட்டம் 20 எம்.ஜி.டி. திட்டம் என்ற  பெயரில் கடந்த 2010,  11ம் ஆண்டுகளில் விரிவுபடுத்தப்பட்டது.

21 தொழிற்சாலைகளுக்கு 20 மில்லியன் காலன் தண்ணீர் எடுக்கப்பட்டதால் விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும்  அவர்கள் எதிர்ப்பை மீறி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.

இதனால், விவசாயம் முடங்கி, விவசாயிகள் மாற்றுத் தொழிலை தேடும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இவ்வாறு விவசாயிகளின் பாசன நீரையும், பொதுமக்களுக்கான குடிநீரையும் ஒரு லிட்டர் 1 பைசாவுக்கு சட்டப்படி பெற்ற தொழிற்சாலைகள்  முறையாக குடிநீர் கட்டணம் ெசலுத்தாமல் வஞ்சித்து வருகின்றன.

அவை கடந்த 2016ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி  வரை வட்டியுடன் சேர்த்து குடிநீருக்கான  உரிமைக் கட்டணம்  ரூ.95 கோடியே 44 லட்சத்து 68 ஆயிரத்து 19 பாக்கி வைத்துள்ளதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால்  வாரியம் தெரிவித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்ட தாமிரபரணி நதிநீர் பாதுகாப்பு  பேரவை அமைப்பாளர் நயினார்குலசேகரன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்துள்ளது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments