ஒரு வயது குழந்தையின் மூச்சு குழாயில் சிக்கிய ‘சேப்டிபின்’

ஒரு வயது குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கியிருந்த சேப்டி பின்னை கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஆபரேஷன் இல்லாமல் அகற்றி சாதனை படைத்தனர். ஈரோடு மாவட்டம் மரப்பாலம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்.

இவரது மகள் சேதுமது. ஒரு வயது ஆகிறது. கடந்த 23ம் தேதி சேதுமதுவிற்கு மூச்சுதிணறல் ஏற்பட்டது. உடனே குழந்தையை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

பரிசோதனையில் குழந்தையின் மூச்சுக்குழாயில் சிறிய பொருள் சிக்கியிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து குழந்தையை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் ஸ்கேன் செய்த போது, அந்த குழந்தையின் இடது கிளை மூச்சுக்குழாயில் ‘சேப்டி பின்’ இருப்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து லேப்ரோஸ்கோப்பி மூலம் சேப்டி பின்னை வெளியே எடுக்க முடிவு செய்தனர். கோவை அரசு மருத்துவமனை காது, மூக்கு தொண்டை நிபுணர் அலிசுல்தான் தலைமையிலான மருத்துவக்குழுவினர் அறுவை சிகிக்சை இல்லாமல் லேப்பேராஸ்கோப்பி மூலம் சேப்டி பின்னை வெளியே எடுத்தனர்.

இது குறித்து டாக்டர் அலிசுல்தான் கூறுகையில், ‘குழந்தை அரசு மருத்துவமனைக்கு வரும்போது நினைவின்றி வந்தது. சேப்டி பின்னை வெளியே எடுக்க அறுவைசிகிச்சை ேமற்கொள்ள நினைத்தோம்.

ஆனால் ஒரு வயது குழந்தை என்பதால் அறுவை சிகிச்சையின்றி லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை மேற்கொண்டோம்.

சேப்டி பின் தலைகீழாக இருந்ததால் சற்று கடினமாக இருந்தது. இருப்பினும் சிகிச்சை வெற்றிகரமாக முடித்துள்ளோம். தற்போது குழந்தை நலமாக உள்ளது’ என்றார்.

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments