கட்சி தொடங்குவதை உறுதி செய்தார் கமல்!

அரசியல் கட்சி தொடங்குவதை நடிகர் கமல் உறுதி செய்துள்ளார்.

சென்னை கேளம்பாக்கத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த தனது பிறந்தநாள் மற்றும் நற்பணி இயக்க விழாவில் பேசிய கமலஹாசன், “தமிழகத்தில் நல்லவர்கள் எல்லாம் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார்கள்.

நாம் வழக்கமான அரசியல் செய்யக் கூடாது. முறையான அரசியல் பயிற்சி ரசிகர்களுக்கு அளிக்கப் போகிறேன், துறை வல்லுனர்கள் அதனை அளிப்பார்கள். கட்சி தொடங்குவதற்கு பணம் எனது ரசிகர்களிடமே உள்ளது.

கடந்த 30 வருடமாக இந்த நற்பணி இயக்கத்தை என் ரசிகர்கள்தான் நடத்தி வருகிறார்கள் அவர்கள் இத்தனை ஆண்டுகளில் ஏறத்தாழ 30 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருப்பார்கள்.

அவர்கள் உண்மையான வள்ளல்கள். அவர்கள் கட்சிக்கான தேவைகளை பார்த்துக் கொள்வார்கள். ” என்றார் கமல்

இதற்கிடையே கமல் நற்பணி மன்ற செயல்பாடுகளுக்கு ஒரு செயலி உருவாக்கப்பட்டுள்ளதாகவும் வரும் 7 ஆம் தேதி அது வெளியிடப்படும் என்றும் கூறப்படுகிறது

இந்த நிகழ்வில் விவசாய சங்க தலைவர் பி.ஆர் பாண்டியன், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஜெயராமன் மற்றும் நீர் செயற்பாட்டாளர் அருண் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.

முன்னதாக இந்நிகழ்வில் பல்வேறு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments