கண்களை கவனிப்பது எப்படி | கண் பராமரிப்பு

கண்களை கவனிப்பது எப்படி ?

நமது சந்தோஷம், துக்கம் எதுவானாலும் அதை காட்டிக் கொடுப்பது கண்கள் தான். அப்படிப்பட்ட கண்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தானே பார்க்க அழகாக இருக்கும்.

கண் (Eye) என்பது ஒளியை உணர்வதற்கு உதவும் ஒரு உறுப்பு ஆகும்.

வெவ்வேறு விதமான ஒளியை உணரும் உறுப்புகள் பல விலங்குகளிடையே காணப்படுகின்றன. மிக எளிய கண்கள் சுற்றுப்புறத்தில் உள்ள ஒளி அல்லது இருளை மட்டும் கண்டு உணரவல்லவை.

இன்னும் மேம்பட்ட (complex) கண்கள், காட்சிகளைப் பார்க்கும் திறன் அளிக்க வல்லவை. பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன, மீன்கள் உட்பட்ட பல மேல்நிலை உயிரினங்கள் இரு கண்களைக் கொண்டுள்ளன.

இவ்விரு கண்களும் ஒரே தளத்தில் அமைந்து ஒரே முப்பரிமாணப் படிமத்தை (binocular vision) காண உதவுகின்றன (மனிதர்களின் பார்வை இவ்வாறானதே).

அல்லது, இரு கண்களும் வெவ்வேறு தளங்களில் அமைந்து இரு வேறு படிமங்களை (monocular vision) காண உதவுகின்றன (பச்சோந்திகள் மற்றும் முயல்களின் பார்வை இவ்வாறானதே).

பார்வைத்திறன் மேம்பட வைட்டமின் ஏ மற்றும் புரதச் சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

சத்துக் குறைவாக உள்ள குழந்தைகளின் கண்ணில் உள்ள வெண்படலம் அதன் பளபளப்பை இழந்து சோர்வாகக் காணப்படும்.

இதனால் ‘பைடாட்ஸ்’ எனப்படும் காய்ந்த முக்கோணப் புள்ளிகள் வெண்வெளிப்படலத்தில் படர வாய்ப்பு உள்ளது.

மேலும், மாலைக் கண் நோய் மற்றும் கருவிழியில் புண் ஏற்பட்டு பூ விழவும் நேரும்

இவற்றுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கொடுக்கவில்லையெனில், பார்வை பறிபோகும் அபாயம் உள்ளது.

கண்களை கவனிப்பது எப்படி:-

கண்களின் அழகை பராமரிக்க தினமும் எட்டு மணிநேரம் தூக்கம் மட்டுமல்லாமல் கால்சியம், விட்டமின்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்அ

தாவது பால், பால் உணவுகள், கீரை வகைகள், முட்டை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப்பழங்கள் பச்சை காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

கண்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் கடிகாரம் சுற்றும் முறையிலும், எதிர்முறையிலும் மூன்று முறை சுற்ற வேண்டும்.

மேலும் அருகில் உள்ள பொருட்களை பார்த்துவிட்டு தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க வேண்டும்.

கட்டைவிரலை நடுவில் வைத்துக்கொண்டு அதனை இடமாகவும் வலமாகவும் விரலை மட்டும் நகர்த்தி தலையை திருப்பாமல் வெறும் பார்வையை மட்டும் திருப்பி பார்க்க வேண்டும்.

தினமும் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்தால் கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

நீண்ட நேரம் கணினி அல்லது தொலைக்காட்சி முன் அமர்ந்து வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி ஏதேனும் பச்சை வெளியைப் பார்க்கலாம் அல்லது கண்களுக்கு குளிர்ச்சி தரும் நீல நிறங்களை பார்க்கலாம்.

ஆரஞ்சு பழத்தை சாறாக பிழிந்து குளிர்சாதனப்பெட்டியில் வைத்து கட்டியான பின்னர் ஒரு துணியில் கட்டிக்கொண்டு கண்களுக்கு மேல் ஓத்தி எடுத்தால் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும்.

சத்துக் குறைபாடு உள்ளவர்கள் பச்சைக் கீரை, மஞ்சள் நிறமுடைய பழங்கள், பால், முட்டை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வேதிப் பொருள் கண்களில் பட்டால், உடனே சுத்தமான குளிர்ந்த நீரினால் சுத்தமாகக் கழுவி அதன் அமிலத்தன்மையைக் குறைத்து பிறகு மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் கண்ணைக் கசக்கக் கூடாது.

கண்களை மூடிய நிலையில், தண்ணீரை எடுத்து முகம் மீது அடிக்கவும். இதனால் கண்களுக்கும், உங்களுக்கும், முழுமையான புத்துணர்ச்சி கிடைக்கும்.

Comments

comments