கலவர பூமியான உத்திர பிரதேசம்

உத்திர பிரதேச மாநிலம் சஹரன்பூரில் வெடித்துள்ள கலவரம் ஒட்டு மொத்த மாநில மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த வாரம் தாகூர் சமூகத்தினருக்கும், தலித்துகளுக்கும் இடையே வெடித்த மோதல் சற்று அடங்கிய நிலையில் இன்று( செவ்வாய்க்கிழமை) மீண்டும் மோதல் வெடித்துள்ளது.

செவ்வாயன்று மஹரன பிரதாப் ஜெயந்தி ஊர்வலத்திற்கு அனுமதி இல்லாதபோதும் திடீரென ஊர்வலம் நடத்திய கும்பல் வரும் வழிகளில் எல்லாம் கடைகள் வாகனங்கள் என அனைத்தையும் சூரையாடியுள்ளன.

போலீஸ் வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. ஒரு உயர் போலீஸ் அதிகாரிகள் இருவர் பலத்த காயமடைந்துள்ளார். இதனால் சஹரான்ப்பூர் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது.

யோகி ஆதித்யநத் முதல்வராக பதவியேற்றது முதல் முஸ்லிம்கள் மீது பசு பாதுகாப்பு குழு என்ற வன்முறை கும்பல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது தலித்களும் ஜாதீய வன்முறை தாக்குதலுக்கு உள்ளாக்கப் படுவதாக உ.பி அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments