கல்வித்துறையில் புரட்சி செய்ய

கல்வித்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்ற முதல் பல அதிரடி அறிவிப்புகளை தினமும் வெளியிட்டு வருகின்றார்.

அமைச்சராக பதவியேற்ற முதன் முதலில் பல ஆண்டுகளாக கல்வித்துறை செயலாளராக இருந்து வந்த சபீதா அதிரடியாக மாற்றப்பட்டார்.

அவருக்கு பதிலாக உதயச்சந்திரன் செயலாளராக நியமிக்கப்பட்டார்.

அதன் பின்னர் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் மாற்றம் கொண்டு வந்தார். அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்வுக்கு இந்த ஆண்டே அட்டவணையை வெளியிட்டார்.

இந்நிலையில், இன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் அமைச்சர் 37 அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கீழடியில் சிந்து சமவெளி பற்றி அறிந்து கொள்ள நூலகம் அமைக்கப்படும்.

பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் ரூ.2.50 கோடி செலவில் அறிவியல் கோளம் அமைக்கப்படும்.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் ரூ.2.10 கோடி மதிப்பில் திறன் வங்கி மையம் அமைக்கப்படும். கலை அறிவியல் கல்லூரிகளில் 89 புதிய பாடப்பிரிவுகள் தொடங்கப்படும்.

32 மாவட்டங்களில் ரூ.3 கோடி மதிப்பில் புத்தகக் கண்காட்சி நடத்தப்படும்.

பொது நூலகங்களுக்கு ரூ.30 கோடி செலவில் புதிய நூல்கள் வாங்கப்படும்.

மெட்ரிக் பள்ளிகள் தொடங்குவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில் படித்துவிட்டு வெளிமாநிலங்களுக்கு படிக்க செல்லும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படும்.

சுயநிதி பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி கொடுக்கப்படும்.

மாணவர்கள் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் போன்ற கலைகளை ஊக்குவிக்க வருடம்தோறும் 100 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் பயிலும் மாணவிகளுக்கு நாப்கின் மற்றும் அதனை எறியூட்டும் மெசின் வழங்கப்படும்.

அண்ணா நூலகத்துக்கு நூல்கள் வாங்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியர்கள் ரூ.7500 சம்பளத்தில் நியமிக்கப்படுவர்.

சிறப்பாக செயல்படும் பள்ளிகள் தேர்ந்தெடுத்து புதுமைப் பள்ளி விருது அளிக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் கட்டாயக் கல்வி திட்டத்தின் மூலமாக மாணவர்கள் சேர்க்க நவம்பர் மாதம் வரைக்கும் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கிராமப்புறங்களில் மற்றும் மலைப்பகுதிகளில் புதியதாக 30 தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்படும். மதுரையில் 1 லட்சம் நூல்களுடன் நூலகம் அமைக்கப்படும்.

அரியவகை நூல்கள் மற்றும் ஆவணங்கள் பொதுமக்களிடமிருந்து வாங்கப்படும். இந்த கல்வியாண்டில் 4084 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள்.

பாடத்திட்டங்களை மாற்றுவதற்கு வல்லுநர் குழு அமைத்து அவர்களிடம் கருத்துக் கேட்டு 1 வாரத்தில் பேரவையில் தெரிவிக்கப்படும்.

தற்காலிகமாக உள்ள 17000 ஆசிரியர் பணியிடங்கள் நிரந்தரப் பணியிடங்களாக மாற்றப்படும்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments