கவுரி லங்கேஷ் கொலை குறித்த விசாரணையில் திடுக்கிடும் திருப்பம்!

ஊடகவியலாளர் கவுரி லங்கேஷ் கொலைக்கும் கல்புர்கி கொலைக்கும் தொடர்பிருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பிரபல கன்னட எழுத்தாளரும் பகுத்தரிவாதியுமான கெளரி லங்கேஷ் கடந்த வாரம் சனிக்கிழமை மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டர்.

அவரின் கொலையாளிகளை கண்டறிய நடத்தப்பட்ட விசாரணையில் இந்த கொலைக்கும் முன்னர் கொலை செய்யப்பட்ட பகுத்தறிவுவாதியான கல்பர்கியின் கொலைக்கும் தொடர்பு இருப்பது தடவியல் சோதனையில் தெரியவந்துள்ளது.

இது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிக்கை எதுவும் தர மறுத்தபோதிலும் இந்த இரு கொலைகளிலும் ஒரே மாதிரியான ஆயுதங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பன்சாரே வை கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட இரு துப்பாக்கிகளில் ஒன்று தபோல்கரை கொலை செய்ய பயன்படுத்தப்பட்டது என்று விசாரணை அறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில் தபோல்கர் கொலை வழக்கை விசாரித்த சிபிஐ மற்றும் பன்சாரே கொலை வழக்கை விசாரித்த மகாராஷ்டிரா SIT இந்த இரு கொலைகளுக்கும் ஹிந்து ஜனாக்ருதி சமிதி இயக்கத்திற்கும் தொடர்பு இருப்பதை நிறுவியது.

இந்த அமைப்பு சனாதன் சன்ஸ்தா அமைப்புடன் தொடர்புடையதாகும்.

இந்த கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் எவ்வாறு யாரிடம் இருந்து பெறப்பட்டன என்றும் இதனை செய்தவர்கள் ஏதேனும் இயக்கத்தை சேர்ந்தவர்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments