குஜராத்:கர்ப்பிணிப் பெண் வன்புணர்ந்து கொல்லப்பட்ட

குஜராத் 2002 ஆம் ஆண்டு கலவரத்தில் 19 வயது கர்ப்பிணிப் பெண் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற சிபிஐ மனுவை மும்பை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு பெரும் கல்வரம் மூண்டது. இதில் 2000 த்திற்கு அதிகமான முஸ்லிம்கள் படுகொலை செய்யபட்டனர். தற்போதைய பிரதமர் மோடி அப்போது குஜராத்தின் முதல்வராக இருந்தார்.

அந்த கலவரத்தில் 19 வயது 5 மாத கர்ப்பிணிப் பெண்ணான பல்கிஸ் பானு சங்பரிவார கும்பலால் வன்புணர்ந்து கொலை செய்யப்பட்டார். மேலும்  மூன்று வயது குழந்தை தலை நசுக்கப்பட்டு கொல்லப்பட்டார். மேலும் அந்த குடுமத்தில் மொத்தம் 14 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.

சம்பவத்தை பார்த்த சாட்சியங்களின் அடிப்படையில் தொடர்புடைய 11 பேருக்கு ஏற்கனவே ஆயுள் தண்டனை வழங்கப் பட்டுள்ளது.

ஆனால் இதில் முக்கிய குற்றவாளிகளான ஜஸ்வந்த், கோவிந்த் மற்றும் சைலேஷ் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று சிபிஐ மேல்முறையீடு செய்தது. மேலும் இது அபூர்வமான வழக்கு எனவே மரணதண்டனையே தீர்வு என்றும் சிபிஐ வாதிட்டது.

இதனை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் சிபிஐயின் கோரிக்கையை ஏற்க மறுத்து குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க மறுத்துவிட்டது.

இந்த சம்பவத்தில் குஜராத் காவல்துறைக்கும் தொடர்பிருந்ததாக கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.<
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments