Home உடல் நலம் ~ Tamil Health குழந்தைக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன ?

குழந்தைக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன ?

8
0
குழந்தைக்கு ஏற்ற பழங்கள் என்னென்ன ?
Fruits for kids tamil.

குழந்தைக்கு ஏற்ற பழங்கள்

-–-இளம்தாய்மார்களின்-கவனத்திற்கு.jpg” width=”640″/>

முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடுக்கும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு  பேஸ்ட்போல் செய்து (ஆப்பமாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பே ஸ்ட்போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டா கவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்திவிட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.

குழந்தைக்கு ஏற்ற பழங்கள் வாழைப்பழம்:-

ஒரு முள்க ரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம்.

முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.

ஆப்பிள்

ஆப்பிளை இட்லிதட்டில் வேகவைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்க லாம். சிலகுழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்க லை உண்டாக்கிவிடும். அப்பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.
அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்:

இந்த‌ ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொ ழுப்புச்சத்து அதிகம். நன்றாகபழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைக ளுக்கு கொழுப்புச்சத்து மிகவும் அவசியம். அ தனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர்கலப்பது சரியல்ல.
பியர்ஸ் பழம்

இந்த‌ பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேக வைத்து மசித்து கொடுக்கலாம்.
சப்போட்டா : சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழவகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக்கொடுக்கலாம். constipationக்கு பப்பாளிப் பழத் தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.

குழந்தைகள் சுலபமாக சாப்பிட வழிகள்

Thanks

பிறந்த குழந்தையைப் பற்றி தகவல்கள்

பழங்களைக் கொடுத்து பழக்கி, இரண்டு அல்லது மூன்று வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம்.

காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும்.

குழந்தைக்கு எழு மாதம் வரை வடி கட்டித் தான் கொடுக்க வேண்டும்.

ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.

முதலில் இரண்டு ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம்.

இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம்.

முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும்.

சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.

அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது.

காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது.

காய்கறி பழங்களை இட்லி தட்டில் ஆவியில் வேக வைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.

Comments

comments