கூந்தல் உதிர்வை தடுக்கும் எளிய வழிமுறைகள்

இன்றைய வாழ்க்கை சூழலில் சுற்றுச்சூழல் மாசு, ரசாயனங்கள், மன அழுத்தம் எனப் பல்வேறு காரணங்களால் கூந்தலின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

இந்தப் பிரச்சினைகளைத் தவிர்த்துக் கூந்தலை எப்படி ஆரோக்கியமாகப் பராமரிக்கலாம் என்று பார்க்கலாம்.

ஒருநாள் விட்டு ஒருநாள் தலைமுடியை அலச வேண்டும். எண்ணெய்ப் பசையுள்ள சருமம் கொண்டவர்கள் தினமும் தலைமுடியை அலச வேண்டும்.

வாரத்தில் இரண்டு முறையாவது தலைக்கு எண்ணெய் வைக்கவேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், வாரத்துக்கு மூன்று தடவையாவது எண்ணெய் வைக்க வேண்டும்.

இரவு தூங்குவதற்கு முன், தலைக்கு எண்ணெய் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். எண்ணெயை மிதமாகச் சூடாக்கி தலையில் தேய்ப்பது நல்லது.

முடியைச் சீவுவதற்குப் பயன்படுத்தும் சீப்புகளைக் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மரத்தாலான சீப்பு முடியைச் சீவுவதற்குச் சிறந்தது.

ஹேர் பிரஷ்களைக் கொண்டு தலைசீவுவதைத் தவிர்க்க வேண்டும்.

கலவையான நுனிகளைக்கொண்ட சீப்புகளைப் பயன்படுத்தலாம். ஈரமான தலையில் சீப்பைப் பயன்படுத்தக்கூடாது.

Comments

comments