கொழுப்பு குறைய வேண்டுமா ஆண்களே?

கொழுப்பு குறைய வேண்டுமா ஆண்களே?

இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலான ஆண்களின் பிரச்னையாக இருப்பது உடல் எடை அதிகரிப்பு தான்.

உடல் எடையை குறைக்க எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்கின்றனர். ஒரு சில உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடல் எடையை நிச்சயம் குறைக்கலாம்.

மேலும் இத்தகைய உணவுகள் உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலுக்கு வேண்டிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளன.

கொள்ளு:

ஐந்து கிராம் கொள்ளுடன், சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைக்கவும். இதை 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து, நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.

கொள்ளை வேக வைத்து, அரைத்து வடிகட்டி, சிறிது இஞ்சி, பூண்டு, சீரகம் சேர்த்து தாளித்து ரசமாக குடிக்கலாம். சாதத்துடன் பிசைந்தும் சாப்பிடலாம்.

கொழுப்பு குறைய வேண்டுமா ? அப்படியெனில் பூண்டு சாப்பிடுங்கள்:-

உடலில் சேரும் கெட்ட கொழுப்புக்களைக் கரைக்கும் உணவுப் பொருளான அல்லீசின் (Allicin) என்னும் பொருள் பூண்டில் உள்ளது.

எனவே கொழுப்பு குறைய வேண்டும் என விரும்பும் ஆண்கள் இதனை தினமும் உணவில் சேர்த்து வந்தால் உடல் எடை குறைவதோடு, இதய நோய் வராமலும் தடுக்கலாம்.

முட்டை :-

ஆண்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய உணவுப் பொருட்களில் முட்டையும் ஒன்று.

ஏனெனில் முட்டை உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் கட்டுப்படுத்தும் மற்றும் உடலில் தங்கியிருக்கும் கொழுப்புக்களை கரைத்து, உடல் எடையையும் குறைக்கும்.

உணவுகளில் எண்ணெய் சேர்க்காமல் சமைக்க முடியாது. எனவே எண்ணெயில் கடுகு எண்ணெயை சேர்த்து சமைத்தால் அதில் உள்ள ஃபேட்டி ஆசிட்டுகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகள் மற்றும் கொழுப்புக்களையும் கரைத்துவிடும்.

பாசிப் பருப்பு :-

இந்த சிறிய மஞ்சள் நிறப் பருப்பில் நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது.

இந்த பாசிப் பருப்பு பருப்பில் வைட்டமின் ஏ, பி, சி, ஈ, புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், இது இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலின் அளவைக் குறைப்பதோடு உடல் எடையையும் குறைக்கும்.

மோர் :-

ஆண்களுக்கு ஒரு சிறந்த உடல் எடையை குறைக்கும் ஆரோக்கிய பானம் என்று சொன்னால் அது மோர் தான்.

திலும் ஜிம் அல்லது உடற்பயிற்சி செய்ததும் ஒரு டம்ளர் மோர் குடித்தால் உடல் எடை குறைவதோடு உடலில் வறட்சியில்லாமல், உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றிவிடும்.

அதிலும் கொழுப்புக்கள் குறைவாக உள்ள தயிரைக் கடைந்து, மோராக குடிப்பது மிகவும் நல்லது.

சிட்ரஸ் பழங்கள்:-

ஆண்கள் சிட்ரஸ் பழங்களை அதிகம் சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்புக்களின் அளவானது குறையும்.

எனவே ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற உணவுப் பொருட்களை சேர்த்தால் உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருக்கும்.

சீரகம் – அதிமதுரம்:

தித்திப்பு குச்சி என்று அழைக்கப்படுகிற அதிமதுரம் மற்றும் சீரகத்தை சம அளவு எடுத்து நன்றாக இடிக்கவும். இதில் நான்கு மடங்கு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்கவும்.

அது ஒரு பங்காக சுண்டியவுடன் வடிகட்டி காலை, மாலை என இருவேளைகளில் தேநீருக்கு பதிலாக அருந்தலாம்.

ஒரு லிட்டர் தண்ணீருடன் இருபது கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.

கறிவேப்பிலை :-

கறிவேப்பிலை சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு சரியாவதோடு, உடலில் உள்ள கொழுப்புக்களும் கரைந்து உடல் எடை குறையும். எனவே ஆண்கள் இதனை உணவில் சேர்ப்பது நல்லது.

ஏலக்காய்:-

ஏலக்காய்ந்த என்னும் நறுமணமுள்ள உணவுப் பொருளானது உடல் எடை குறைக்கும். மேலும் வாய் துர்நாற்றத்தை தடுத்து, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இது போன்ற உடல் நலம் சார்ந்த தகவல்களை உடனுக்குடன் பெற கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments