கோயம்பேட்டிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு

கோயம்பேட்டிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தீபாவளிக்கு 750 பஸ்கள் இயக்கம்:-

கோயம்பேட்டியிலிருந்து தீபாவளி பண்டிகையையொட்டி டெல்டா மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் 750 பஸ்கள் இயக்கப்பட உள்ளது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் வருகிற 26, 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் 24 மணி நேரமும் தமிழகம் முழுவதும் 21, 289 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

சென்னையில் பஸ் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக, கோயம்பேடு பஸ் நிலையம், அண்ணாநகர் மேற்கு மாநகர போக்குவரத்து கழக பஸ் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையத்திற்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பஸ்நிலையம், தாம்பரம் சானிடோரியம் அறிஞர் அண்ணா பஸ் நிலையம், பூந்தமல்லி பஸ் நிலையம் ஆகிய இடங்களிலிருந்து மாவட்டங்களுக்கு பஸ்கள் புறப்படும்.

இந்த 5 பஸ் நிலையங்களிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு புறப்படும் பஸ்களில் ஏறுவதற்கு வசதியாகவும், சென்னை திரும்பி அவரவர் இடங்களுக்கு செல்வதற்கு வசதியாகவும், 200 மாநகர சிறப்பு பஸ்கள், இணைப்பு பஸ்கள் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து இயக்கப்பட உள்ளது.

வருகிற 24ந்தேதி முதல் சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு நடைபெறும். மேலும் www.tnstc.in என்ற இணையத்தளத்திலும் பயணச்சீட்டை முன்பதிவு செய்து கொள்ளலாம். கோயம்பேட்டிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கும், டெல்டா மாவட்டங்களிலிருந்து சென்னைக்கும் 750 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

கோயம்பேட்டிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு தீபாவளிக்கு பஸ்கள்:-

கோயம்பேட்டியிலிருந்து நாகப்பட்டினம், மயிலாடுதுறை செல்லும் பஸ்கள், வருகிற 26ந்தேதி 59 பஸ்களும், வருகிற 27ந்தேதி 87 பஸ்களும், வருகிற 28ந்தேதி 79 பஸ்களும், திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி செல்லும் பஸ்கள், வருகிற 26ந் தேதி 27 பஸ்களும், வருகிற 27ந்தேதி 40 பஸ்களும், வருகிற 28ந்தேதி 36 பஸ்களும் இயக்கப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டை செல்லும் அனைத்து வழித்தட பஸ்களும் (அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் உள்பட) தாம்பரம் சானிடோரியம், அறிஞர் அண்ணா பஸ்நிலையத்திலிருந்து புறப்படும்.

இங்கிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், மன்னார்குடி, பட்டுக்கோட்டைக்கு வருகிற 26ந் தேதி 111 பஸ்களும், 27ந்தேதி 163 பஸ்களும், 28ந்தேதி 146 பஸ்களும் இயக்கப்படும். அனைத்து பஸ் நிலையங்களுக்கும் இணைப்பு பஸ்கள், மாநகர போக்குவரத்து கழகத்தின் மூலம் இயக்கப்படும்.

கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக அலுவலர்கள், ஊழியர்கள் 3 நாட்களும் பஸ் நிலையங்களில் இருந்து பஸ்களை முறையாக இயக்க வழிவகை செய்வார்கள் என நாகை மண்டல கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் கௌரிசங்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments