சரும பராமரிப்புக்கு வெள்ளரிக்காய்

சரும பராமரிப்புக்கு வெள்ளரிக்காய்:- மென்மை, குளிர்ச்சி தரும் வெள்ளரிக்காய்

கருவளையம் நீங்க விரைவான, பாதுகாப்பான, எளிய வழி வெள்ளரிக்காயைப் பயன்படுத்துவதுதான் வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தை போக்குகின்றன.

1 டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் சாற்றில் 2 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவலாம் அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ், எலுமிச்சை ஜூஸ் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, முகத்தல் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவவும் செய்யலாம். இவற்றின் மூலமும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்

வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனைத்து கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும்.

முல்தானி மெட்டி பொடியில் வெள்ளரிக்காய் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரினால் முகத்தைக் கழுவ, முகத்தில் உள்ள பருக்கள் அனைத்தும் நீங்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் ஓட்ஸ் பொடி மற்றும் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் நீர்ச்சத்தை தங்க வைத்து, சருமம் வறட்சியடைவதைத் தடுக்கும்.

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் சிறிது எலுமிச்சை சாறு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். முக்கியமாக இந்த ஃபேஸ் பேக் எண்ணெய் பசை சருமத்தினருக்கு ஏற்ற ஒன்று

Read more at: http://tamil.boldsky.com/beauty/skin-care/2016/best-cucumber-packs-for-soothing-skin/slider-pf64553-010867.html

கண்வீங்கி போய் இருந்தால் வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள் வைத்தால் அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும்.

வெள்ளரியை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும். சரும பராமரிப்புக்கு வெள்ளரிக்காய்

வெள்ளரிச் சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும்.

சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்வீச்சு, சருமத்தை பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும் சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது.

ஆப்பிளை அரைத்து, வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து, குளிர்ச்சியான நீரால் முகத்தைக் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்ற ஒன்று.

வெள்ளரிக்காயை சாறு எடுத்து, அத்துடன் கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து தினமும் கழுவி வர, முகத்தில் உள்ள கருமைகள் அகலும்

வெள்ளரிக்காயை அரைத்து, அத்துடன் அவகேடோ பழத்தை சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகம் புத்துணர்ச்சியுடனும், வறட்சியின்றியும் பொலிவோடு காணப்படும்.

வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

Comments

comments