சவூதி அராம்கோ இந்தியாவில் முதலீடு செய்ய திட்டம்

சவூதியின் மிகப்பெரிய பெட்ரோலிய நிறுவனமான சவூதி அராம்கோ இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.

அராம்கோ தலைமை அதிகாரி அமின் அல் நாசர் மற்றும் இந்திய பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர், இணைந்து நிறுவன அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

அப்போது பேசிய அமீன் அல் நாசர், இந்தியாவில் அராம்கோ முதலீடு செய்ய திட்டம் மேற்கொண்டுள்ளது. அதற்கான முன்னேற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

இந்தியா பெட்ரோலிய சந்தையில் மிக முக்கிய பங்கு வகிக்கும் நாடாகும், சுமார் ஒரு நாளைக்கு 4.6 மில்லியன் பீப்பாய்கள் இந்தியாவில் விற்பனையாகிறது. இது இரு நாட்டு பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உருதுணையாக இருக்கும் என்றார்.

மேலும் பெட்ரோலிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், ” சவூதி அராம்கோவுடன் கூட்டு வைப்பது, இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ மேலும் வலு சேர்க்கும் என்றார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments