சீமைகருவேலமரம் அழிப்பால்?

 

கிராம முன்னேற்றம் பற்றிப் பேசுவோருக்கும், கிராமங்களில் நிலம் இல்லாதவர்களுக்கும் சொத்தாக இருப்பது இயற்கை வளங்கள்தான். சென்ற காலங்களில் காடுகளும், ஆறுகளும், கரடுகளும் தான் சாதாரண மக்களின் சொத்தாக இருந்தன.

காடுகளில் காய்ந்த மரங்களை வெட்டி விறகாகவும், மரக்கருவிகளாகவும் விற்று வாழ்ந்தனர்.

ஆறுகளில் மீன் பிடித்து விற்று வாழ்ந்தனர். காடுகளிலும், புல் தரைகளிலும் ஆடு மாடுகள் மேய்த்து வாழ்ந்தனர். இப்போது இந்த இயற்கை வளங்கள் எதுவும் இல்லை.

இயற்கை வளமாக இருப்பது சீமை கருவேல மரம் மட்டுமே.

சீமை கருவேல மரத்தை வெட்டி மரமாகவும், விறகாகவும் விற்று வாழ்பவர்கள் பலர் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றனர்.

அதனை எரிகரியாக மாற்றி விற்று வாழ்பவர்கள் பலர். கருவேல மரத்தின் காய்களை நம்பியே ஆடு வளர்ப்பவர்கள் பலர்.

மேலும் பல்வேறு தொழிற்சாலைகளும் இந்த எரிகரியைத்தான் பயன்படுத்தி வருகின்றன.

இந்த எரிகரியின் விலையும் மிகவும் குறைவாக இருப்பதால் தொழிற்சாலைகளுக்கு இது வரப்பிரசாதம் போன்று இருந்தது.

ஆனால் தற்போது சீமை கருவேல மரங்கள் அழிக்கப்பட்டு வருவதால் எரிகரி கிடைப்பது அரிதாகி விடும்.

இந்த விலை குறைவான விறகுக்கு மாற்று இல்லாததால் தமிழகத்தின் பல தொழில்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும்.

அதில் கடுமையாக பாதிக்கப்படப்போவது துணி சைஸிங் தொழிலாகத்தான் இருக்கும். அரிசி ஆலைகளுக்காவது நெல் உமி உண்டு.

மின்சாரத்தை நெருப்புக்கு மாற்றாக பயன்படுத்த த. நா. மி. வா இருக்கும் நிலையில் தமிழகத்தில் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு உபரி மின்சாரம் கிடைக்க வாய்ப்பேயில்லை என்று தோன்றுகிறது.

ரூபாய் நோட்டு பிரச்சனையில் இருந்து தட்டித் தடுமாறி எழும் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இது மீண்டும் ஒரு அடியாக இருக்கும் என கூறப்படுகிறது.
ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments