சுவாதி கொலை காரணம் யார்?

சுவாதி கொலை காரணம் யார்? வாட்ஸ் அப் யுவராஜ் வெளியிட்டுள்ள வைரல் ஆடியோ – நன்றி – விகடன்.

டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட திருச்செங்கோடு யுவராஜ், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, அடிக்கடி தனது நிலை குறித்து விளக்க ஆடியோக்களை வாட்ஸ் அப்பில் பரப்பி, பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். பின்னர் போலீசில் சரண்டராகி சிறையில் அடைக்கப்பட்டு, இப்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்திய சுவாதி கொலை வழக்கு சம்பந்தமாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோ இதோ – சுவாதி கொலை காரணம் யார்?

ராம்குமாரின் கழுத்தை அறுத்தது தென்காசி காவல் ஆய்வாளர்?: சுவாதி கொலை வழக்கில் புதிய பரபரப்பு ?

சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ராம்குமாரின் கழுத்தை அறுத்தது தென்காசி காவல் ஆய்வாளர் தான் என ராம்குமாரின் தந்தை பரமசிவன் புகார் அளித்துள்ளார். ஆதாரம்:

ராம்குமாரை காவல்துறை கைது செய்ய முயன்றபோது ராம்குமார் பிளேடால் தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டது.

ஆனால் ராம்குமார் கழுத்தை அறுக்கவில்லை காவல்துறையுடன் வந்தவர்கள் தான் ராம்குமாரின் கழுத்தை அறுத்தார்கள் என ராம்குமாரின் தந்தையும், அவரது வழக்கறிஞரும் குற்றாம் சாட்டினர்.

இதனையடுத்து ராம்குமாரின் தந்தை பரமசிவன் தனது மகன் ராம்குமாரின் கழுத்தை அறுத்தது தென்காசி காவல் ஆய்வாளர்தான் என பரபரப்பு புகார் ஒன்றை செங்கோட்டை காவல் நிலையத்தில் அளித்துள்ளார்.

அவரது புகாரில், எனது மகன் கைது செய்யப்பட்டபோது எனது வீட்டிற்கு வந்த இரண்டு காவல்துறை அதிகாரிகள் உனது மகன் பின்புறத்தில் கழுத்தை அறுத்து கொண்டு கிடக்கிறான் என்று கூறினார்கள்.

நாங்கள் சென்று பார்த்தபோது ராம்குமார் கழுத்து அறுபட்டு கிடந்தான் அவன் அருகில் நின்றிருந்த ஒரு காவலர் கையில் ரத்தம் படிந்திருந்தது.

மேலும் தனது மகன் ராம்குமாரை கொலை செய்ய முயற்சி செய்த காவல் ஆய்வாளர் பாலமுருகன் மீதும், அவருடன் வந்த மற்ற காவலர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

பண்ருட்டி: சுவாதி கொலை வழக்கில் காவல்துறை தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பண்ருட்டியில் பேட்டியளித்துள்ளார்.

அவர் அளித்த பேட்டியில்,

சுவாதி கொலை வழக்கில் ஏராளமான சந்தேகம் எழுந்துள்ளது. ஒவ்வொரு நாளும் வெவ்வேறு தகவல்கள் கசிந்து வருகின்றன. இவை எல்லாம் ஆதார பூர்வமான தகவல் என்று கூறமுடியாவிட்டாலும் கூட, ஒன்றையும் புறம் தள்ள முடியாததாக உள்ளன.

தற்போது பேசப்படுவது, சுவாதி கொலை ஒருதலை காதல் கொலை அல்ல. அது ஜாதி ஆணவக்கொலை. மதம்விட்டு மதம் திருமணம் செய்வதற்கான முயற்சி நடந்த போது இந்த கொலை நடத்ததாக கூறப்படுகிறது.

காவல் துறையின் நடவடிக்கையில் முன்னுக்கு பின் முறனான போக்குகள் உள்ளன. சுவாதியின் முகநூல் விபரங்கள் இன்னும் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்களை தருகின்றன.

ராம்குமார் முகநூலில் சுவாதியை பற்றிய எந்த தகவலும் இல்லை என்பது மேலும் அதிர்ச்சியை தருகிறது. முகநூல் மூலம் தான் சுவாதியிடம் ராம்குமாருக்கு நட்பு ஏற்பட்டது.

அதுதான் ஒருதலை காதலாக மாறியது. அதன் அடிப்படையில் தான் ராம்குமார் சென்னையில் தங்கினார் என்று காவல்துறை தரப்பில் சொல்லப்பட்ட தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்று விவாதிக்கப்படுகிறது.

எனவே உண்மையை மூடி மறைப்பது, நீதிக்கு எதிராக செயல்படுவது, யாரை காப்பாற்ற என்ற கேள்வி எழுகிறது. சுவாதி முகநூல், தொலைபேசி ஆகியவை மூலம் கண்டறிந்தத் தகவல்களை காவல்துறை வெளியிட மறுப்பது ஏன்.

பிலால் மாலீக் என்பவரோடு சுவாதிக்கு ஏற்பட்ட நட்பு எத்தகையது. காவல்துறை புலனாய்வு செய்வதற்கு முன்னரே மற்றவர்கள் மாலீக் பிலால் பெயரை பதிவு செய்தது எந்த அடிப்படையில்.

சுவாதி கொலை செய்யப்பட்ட இடத்திற்கு மாலீக் பிலால் வந்தது எப்படி, அவருக்கு யார் தகவல் அளித்தது என பல கேள்விகள் எழுகின்றன.

இதை காவல்துறை மூடி மறைக்க முயற்சிப்பதாக தெரிகிறது. எனவே தான் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.

உடனடி செய்தி திரட்டல்களை பெற எங்கள் முகநூல் பக்கத்தில் இணையுங்கள்

Comments

comments