சோரியாஸிஸ் மருந்து எளிதில் செய்யலாம்

வீட்டிலேயே தயாரிக்கலாம் சோரியாஸிஸ் மருந்து

வெட்பாலை இலைகளைச் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெயில் போட்டு, மூன்று முதல் நான்கு நாட்கள் வரை வெயிலில் காயவைத்து எடுக்க, கருநீல நிறம்கொண்ட தைலம் கிடைக்கும்.

அதை 10 முதல் 15 துளிகள் உள்ளுக்கும் வெளிப்பூச்சாகவும் கொடுக்க, வெகு நாட்களாக இருந்து வரும் ‘சோரியாசிஸ்’ மெள்ள மெள்ளக் குறையத் தொடங்கும்.

இதையும், இதோடு சேர்த்து, இந்த சோரியாசிஸ் நோய்க்கு என்றே பிரத்யேகமாக அரசு சித்த மருத்துவமனைகளிலும் தேசிய சித்த மருத்துவமனையிலும் வழங்கப்படும் மூலிகை மருந்துகளைக்க
கொண்டே, இந்த நோயை முழுமையாகக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

வனப்பான தோல் இருக்க:-

கறுப்பு நிறம்… அழகு மட்டும் அல்ல, ஆரோக்கியமும்கூட. அதை சிவப்பு நிறம் ஆக்குகிறேன் என முயற்சிப்பது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வதற்கு சமம்.

தோல் உலராமல் வழவழப்பாக வைத்திருக்க உங்கள் அன்றாட மெனுவில், பப்பாளி, மாதுளை, சிவப்புக் கொய்யா, பன்னீர்த் திராட்சை, பெரிய நெல்லி இருந்தால் போதும்.

டேபிள் பெஞ்சுக்கு வார்னிஷ் அடிப்பதுபோல, தோலை பல ரசாயனங்களால் பட்டைத் தீட்ட வேண்டியது இல்லை.

பாசிப்பயறு மாவு, நலுங்கு மாவு தேய்த்துக் குளிப்பது, சோப்பு போல் தோலின் இயல்பான எண்ணெய்த்தன்மையைப் போக்காமல், வழவழப்புடன் வனப்பாக இருக்க உதவும்.

தோல் முற்றிலும் வறட்சி அடையாமல் இருக்க நல்லெண்ணெய்க் குளியல், காயத்திருமேனித் தைலக் குளியல் நல்லது.

சிறுவயது முதலே இந்தப் பழக்கங்களைப் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

தோசைமாவு, இயற்கையான புரோபயாட்டிக் சத்துள்ள கொண்ட ஒரு scrub. அதைக்கொண்டு முகத்தைக் கழுவி, தோலின் இறந்த செல்களை நீக்கி முகப் பொலிவு பெறலாம்.

MELASMA, BLEMISHNESS முதலான சாம்பல் நிற முகத் திட்டுகளுக்கு, முல்தானிமட்டியில் ஆவாரைப் பூ, ரோஜாப் பூ சேர்த்து அரைத்து எடுத்துக்கொண்ட அந்தக் கலவையை மோரில், அல்லது பன்னீரில் குழைத்துப் பூசி நான்கு மணி நேரம் கழித்துக் கழுவலாம். திட்டுக்கள் மறையும்

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள். மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்

Comments

comments