ஜல்லிக்கட்டு போராட்ட எதிரொலி

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க உலகம் முழுவதும் இளைஞர்கள் பேராட்டத்தில் குதித்திருந்தனர்.

அலங்காநல்லூரில் ஆரம்பித்து வைக்கப்பட்ட அறப்போராட்டம் சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் என ஆயிரக்கணக்கானோர் குவிந்து போராட்டக்களத்தை வலுப்படுத்தினர்.

பின்னர், மத்திய, மாநில அரசுகளை அடிபணிய வைத்து வெற்றியும் கண்டனர்.

இந்த போராட்டத்திற்கு மெரினாவில் உள்ள சிறு கடைக்காரர்கள், மீனவர்கள் என ஏராளமானோர் ஆதரவு தெரிவித்து இளைஞர்களுக்கு உதவிபுரிந்து வந்தனர்.

திருவல்லிக்கேணியில் இளைஞர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த வன்முறை வெறியாட்டத்தில் மீனவக் குப்பத்தை சேர்ந்தவர்கள்தான் உதவிபுரிந்தனர்.

மேலும், மெரினா கடற்கரையை சுற்றிலும் போலீசார் சூழ்ந்த நிலையில், மீனவர்களின் உதவியால் படகுகளில் வந்து கடலில் இறங்கி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், மீனவர்களை பழிவாங்கும் நடவடிக்கையாக, தற்போது மெரினாவில் மீனவக் குடும்பங்களின் சிறுகடைகளை முறைப்படுத்துகிறோம் என அகற்றியும், அங்குள்ள முன்னுக்கு முரணாக பொக்லைன் மூலம் தூக்கு வீசியும் மாநில அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்தச் செயல் மீனவர்களையும், இளைஞர்களையும் மீண்டும் போராட்டத்தில் இறங்க வழிவகுத்துவிடும்.

ஆளுங்கட்சி அமைச்சர்களின் வீடுகளில் வருமானவரித்துறையினர் ரெய்டு, இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா போன்ற பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பதிலிருந்து மக்களை திசைதிருப்ப தமிழக அரசு இவ்வாறு செயல்படுகிறதா என மக்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments