டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆர்.கே.நகரில் மாணவர்கள் திடீர் போராட்டம்

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட கோரியும் சென்னை ஆர்.கே.நகர் காவல் நிலையம் அருகே மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உரிய அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த கூடாது என போலீசார் அறிவுறுத்தியதால் இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இளைஞர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் தாங்கள் எந்த அமைப்பையும் சேர்ந்தவர்கள் இல்லை என்றும் தேர்தலை புறக்கணிக்க உள்ளதாகவும் கூறியுள்ளனர்.

திடீர் போராட்டத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments