தண்ணீர் கொடுத்த மனைவி கொலை:- அடுத்தவர் வயலுக்கு ?

அடுத்தவர் வயலுக்கு பம்ப்ஷெட் தண்ணீர் கொடுத்த மனைவி கொலை: கணவன் தற்கொலை; 4 குழந்தைகள் அனாதை

காவிரியில் தண்ணீரும் இல்லை, மழையும் இல்லை. இதனால் சம்பா பயிர்கள் கருகுகிறது.

தண்ணீர் தட்டுப்பாடு நிலையில் அடுத்தவர் வயலுக்கு பம்ப்ஷெட் தண்ணீர் கொடுத்த மனைவியை கணவன் கொலை செய்து செய்துவிட்டு அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

இதனால் 4 குழந்தைகள் அனாதையாகி விட்டது.

தண்ணீர் கொடுத்த மனைவி கொலை:-

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தை அடுத்த பேரளம் அருகே உள்ள களிச்சாதோப்பு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராமலிங்கம் (50).

இவருக்கு 5 ஏக்கர் நிலம் உள்ளது. பம்ப்ஷெட்டும் உள்ளது. தற்போது வயலில் நெல் சாகுபடி செய்துள்ளார். காவிரி ஆற்றில் தண்ணீர் இல்லை, மழையும் இல்லாததால் சம்பா பயிர்கள் கருகி வருகிறது. இதனால் 6 விவசாயிகள் பலியாகி உள்ளனர்.

தண்ணீர் தட்டுப்பாடு உள்ள இந்த நிலையில்  பம்ப்ஷெட்டில் கிடைக்கும் தண்ணீரை அடுத்தவர் வயலுக்கு கொடுத்த மனைவியை விவசாயி கொலை செய்து உள்ளார்.

ராமலிங்கத்தின்மனைவி ஆனந்தி (42). வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்றார். அப்போது பக்கத்து நிலத்துக்காரர், தனது வயலும் காய்ந்து கிடக்கிறது. உங்கள் பம்ப்ஷெட்டில் இருந்து தண்ணீர் தாருங்கள் என கேட்டார். மனம் இரங்கிய  ஆனந்தி  அந்த வயலுக்கும் தண்ணீர் பாய்ச்சி உள்ளார்.

இதை அறிந்த ராமலிங்கம், நமக்கே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும்போது நீ ஏன் மற்ற வயலுக்கு தண்ணீர் கொடுத்தாய் என கேட்டார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த ராமலிங்கம் இரவு சாப்பாட்டின் போது குடிநீரில் விஷத்தை கலந்து குடித்து விட்டு மனைவிக்கும் கொடுத்துள்ளார்.

வாந்தி எடுத்து மயங்கி விழுந்த இருவரையும் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வழியிலேயே இருவரும் இறந்தனர். இது குறித்து பேரளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமலிங்கம் தம்பதிக்கு திருமணமாகி 20 ஆண்டுகள்  ஆகிறது. மகன் மகாதேவன் மற்றும் 3 மகள்கள் உள்ளனர்.

தண்ணீர் பிரச்னையால் கணவன், மனைவி இருவரும் பலியாகி விட்டதால் 4 குழந்தைகளும் அனாதைகள் ஆகிவிட்டனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments