தனுஷ் உடல் அங்க அடையாளங்களை அழித்தது அம்பலம்! அவரது உண்மையான பெயர் கலைச்செல்வன்?

மதுரை மாவட்டம், மேலூரைச் சேர்ந்த கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், நடிகர் தனுஷ் தங்களுடைய மகன் என்றும்,அவர் 10ம் வகுப்பு வரை மேலூரில் தங்கள் பராமரிப்பில் படித்து வந்தார்.

சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்ததால் அவர் கடிதம் எழுதி வைத்துவிட்டு பெற்றோருக்கு தெரியாமல் சென்னைக்குச் சென்றுவிட்டார்.

கதிரேசன்–மீனாட்சி தம்பதியர், தங்களது  உண்மையான மகன் பெயர் கலைச்செல்வனின்  10ம் வகுப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட சான்றுகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

தங்களுக்கு வயதாகிவிட்டதால், பராமரிப்பு தொகை வழங்க அவருக்கு உத்தரவிட வேண்டும் என மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஆனால், அவர்கள் கூறும் தகவல் பொய். எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய நடிகர் தனுஷ், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை மதுரை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ்க்கு டிஎன்ஏ பரிசோதனை நடத்தக்கோரி கதிரேசன் மீனாட்சி தம்பதியினர் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர்.

மனுவை விசாரித்த நீதிமன்றம் டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்கு மதுரை ராஜாஜி மருத்துவமனை முதல்வருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

முன்னதாக ராஜாஜி மருத்துவமனை முதல்வர் வைரமுத்து ராஜா தலைமையில் 2 மருத்துவர்கள் தனுஷ் உடலில் உள்ள அங்க அடையாளங்களை ஆய்வு செய்து அறிக்கையை நீதிமன்றத்தில் இன்று இந்த வழக்கு நீதிபதி பிரகாஷ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அதில் நடிகர் தனுஷ் அங்க அடையாளம் லேசர் சிகிச்சை மூலம் மறைக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவித்தார். மேலும் இந்த வழக்கை நீதிபதி வருகிற 27ம் தேதிக்கு தள்ளி வைத்து  உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments