கோவில் ‘விர்ச்சுவல் டூர் சேவை’ : அறநிலையத்துறை அறிமுகம்

தமிழகம் முழுவதும் உள்ள பிரதான கோயில்களை முழுமையாக வீட்டில் இருந்து பார்க்கும் வகையில் அறநிலையத்துறை தனது இணைய தளம் மூலமாக விர்ச்சுவல் டூர் எனப்படும் இணைய சுற்றுலாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் இந்து அறநிைலயத்துறை கட்டுபாட்டில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளது. இந்த கோயில்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள் அடக்கம்.

இந்த முக்கிய கோயில்களுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் இணையச்சுற்றுலா என்ற பெயரில் திருக்கோயில்களின் நிகழ்வுகளை ஆவணப்படுத்தி படங்கள் இணையதளத்தில் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, இணைய சுற்றுலா சேவையை அறநிலையத்துறை தொடங்கியுள்ளது.

அதன்படி முதற்கட்டமாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயில், பழனி தண்டாயுதபாணி கோயில், காஞ்சிபுரம் ஏகாம்பநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில், திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் கன்னியாகுமரி கன்னியாக்குமரி அம்மன் கோயில், நாகப்பட்டினம் திருமணஞ்சேரியில் உள்ள உதவகநாதசாமி கோயில், திருநெல்வேலி கிருஷ்ணாபுரத்தில் உள்ள வெங்கடாஜலபதி கோயில் உள்ளிட்ட 10 கோயில்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த புகைப்படங்கள் அந்த கோயிலை முழுமையாக அறிய பயன்படுகிறது.

இதில் உள்ள காட்சிகளை 360 டிகிரி சுற்று கோணத்தில் நாம் விரும்பும் வகையில் தத்ரூபமாக கண்டு மகிழலாம். கோயில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை பெரிதுபடுத்தி குளோஸ் அப் காட்சியில் காணலாம்.

அறநிலையத்துறையின் இணையதளமான www.tnhrce.gov.in   என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, இணைய சுற்றுலா பகுதியில் முதற்கட்டமாக 10 கோயில்கள் இடம் பெறறுள்ளன.

இந்த கோயில்களை இணையதளத்தின் மூலம் நாம் விரும்பும் வகையில் பார்த்து கொள்ள முடியும். இந்த பகுதியில் திருச்சி ரங்கம் ரங்கநாதர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவேற்காடு கருமாரியம்மன் கோயில் உட்பட பிரதான கோயில்கள் அனைத்தும் விரைவில் இடம் பெறுகிறது’ என்றார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments