தமிழக நகர் ஊரமைப்பு துறை பணி வாய்ப்பு

தமிழக நகர் ஊரமைப்பு துறை சர்வேயர் மற்றும் டிராப்ட்ஸ்மென் பணி வாய்ப்பு.

தமிழக நகர் ஊரமைப்பு துறையில் காலியாக உள்ள 98 நில அளவர், உதவி வரைவாளர் பணியிடங்கள் போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:நிலஅளவை மற்றும் வரைவாளர்.

தமிழக நகர் ஊரமைப்பு துறை பணி வாய்ப்பு பணி காலியிடங்கள்: 98

வயது வரம்பு : 01.07.2015 தேதியின்படி 18 – 30 க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி : Draughtsman (Civil) அல்லது Surveyor பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும். தமிழ் வழியில் படித்தவர்களுக்கு 20 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இப்பணிக்கு பொருந்தும். அதற்கான சான்றிதழை காண்பிக்கப்பட வேண்டும். அதற்கான மாதிரி படிவத்தை www.dtcpexam.com என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

சம்பளம் விகிதம் : மாதம் ரூ.5,200 – 20,200 + தர ஊதியம் ரூ.2,400 மற்றும் இதர சலுகைகள்.

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத் தேர்வு, படம் வரையும் திறன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு மையங்கள் : சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, வேலூர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.300. இதனை Director of Town and Country Planing என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.dtcpexam.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் படிவத்தை நிரப்பி பின் அதனை நகல் எடுத்து அதனுடன் பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், ஐடிஐ சான்றிதழ், தமிழ் வழியில் படிவராக இருந்தால் அதற்கான சான்றிதழ், விண்ணப்பக் கட்டணத்திற்கான டி.டி, வேலைவாய்ப்பு பதிவு அட்டை நகல், மாற்றுத்திறனாளிகளுக்கான சான்றிதழ்களின் நகல்களிலும் விண்ணப்பதாரரின் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப்படிவ நகல் அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director of Town and Country Planing, 4th Floor, P.T.Lee Chengalvaraya Naiker Building, 807, Anna salai, Chennai – 02

ஆன்லைன் விண்ணப்பப் படிவ நகல் மற்றும் சான்றிதழ் நகல்கள் சென்றடைய கடைசி தேதி: 27.07.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.dtcpexam.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Comments

comments