பாட்டில் இளநீர் கடைகளில் விரைவில் அறிமுகம்

பாட்டில் இளநீர் கடைகளில் விரைவில் அறிமுகம்

தமிழ்நாட்டில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் பாட்டில் இளநீரை கடைகளில் அறிமுகம் செய்ய விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.

ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக் கோரி நடந்த இளைஞர்களின் எழுச்சி போராட்டத்தின்போது பன்னாட்டு குளிர்பானங்களை அருந்த மாட்டோம் எனக் கூறினர்.

அதற்கு ஆதரவாக வியாபாரிகள் சங்கங்களும் மார்ச் 1 முதல் தமிழகத்தில் உள்ள கடைகளில் பன்னாட்டு குளிர்பானங்களை விற்க தடை விதிப்பதாக அறிவித்தனர்.

இதையடுத்து பெரும்பாலான கடைகளில் குளிர்பானங்கள் விற்பது நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பன்னாட்டு குளிர்பானங்களுக்கு மாற்றாக விவசாயிகளே ஒன்றிணைந்து இளநீரை பாட்டில்களில் அடைத்து விற்க முடிவு செய்துள்ளனர்.

இவற்றை மளிகைக் கடைகள் மூலமாக பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

உடல் இயக்கத்துக்கு தேவையான அனைத்துவித தாது உப்புகளும், தேவையான குளிர்ச்சி, இருதயம், கல்லீரல், சிறுநீரகம், கண்களில் வெப்பம் பரவாமல் தடுக்கவும், டைபாய்டு, மலேரியா, மஞ்சள் காமாலை, அம்மை நோய்கள் பாதிக்கப்பட்டால் மருத்துவரால் பரிந்துரை செய்யப்படுவது இளநீர் ஆகும்.

கோடை காலங்கள் மட்டுமின்றி எல்லாவித காலநிலைகளுக்கும் ஏற்றது.

தமிழகத்தில் பொள்ளாச்சி, உடுமலைப் பகுதிகளில் அதிக அளவு தென்னை சாகுபடி பரப்பு உள்ளது.

பன்னாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான அலை வீசத் தொடங்கியுள்ளதை அடுத்து இளைஞர்கள் மத்தியில் விவசாயிகளுக்கு உதவும் வகையில், இயற்கையான இளநீர் பருக வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments