தமிழ்நாட்டு பெண்கள் அழகின் பின்னணி

தமிழ்நாட்டு பெண்கள் அழகின் ரகசியத்திற்கு பின்னணியில் உள்ள பாசிப்பயறு மாவு!!!

இன்றைய காலத்தில் பெண்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

அதற்காக அழகு நிலையங்கள் மற்றும் பல விஷயங்களை தேடி அலைகின்றனர்.

ஆனால், பண்டைய காலத்தில் இத்தகைய அழகு சாதனங்களோ மற்றும் நிலையங்களோ இல்லை. இருந்தாலும் அவர்களின் அழகிற்கு எந்த குறைச்சலும் இல்லை.

அவர்கள் அழகின் ரகசியம் என்னவென்று தெரியுமா? அது தான் பாசிப்பயறு மாவு.

இந்த பாசிபயறு மாவை அவர்கள் குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக தேய்த்துக் குளிப்பார்கள்.

வாருங்கள் இப்போது இதன் அற்புத பயன்களைப் பார்ப்போம்….

முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மறையும்

பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும்.

புத்துணர்ச்சியான சருமம்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களின் முகம் எப்போதும் பொலிவிழந்து புத்துணர்ச்சியின்றி இருக்கும்.

அத்தகையவர்கள், பாசிப்பயறு மாவை அன்றாடம் பயன்படுத்தினால், அழகு அதிகரித்து காணப்படும்.

மென்மையான சருமம்

பாசிப்பயறு மாவை தினமும் உடல் முழுவதும் பூசிக் குளித்து வந்தால், சருமம் மென்மையாக இருப்பதோடு, உடல் சூடு குறையும்.

சரும சுருக்கம் நீங்கும்

அன்றாடம் பாசிப்பயறு மாவை முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும்.

கருமை நீங்கும்

வெயிலால் கருமையடைந்த சருமத்தை வெள்ளையாக்க, பாசிப்பயறு மாவுடன், பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, மாஸ்க் போட்டு வந்தால், கருமை நீங்கும்.

 

மேலும் தமிழகம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

<div class=”fb-like” data-href=”https://www.facebook.com/tamilnaatla/” data-layout=”standard” data-action=”like” data-size=”large” data-show-faces=”true” data-share=”true”></div>

Source link

Comments

comments