தரமற்ற கட்டடத்தில் அரசு பள்ளி

தரமற்ற கட்டடத்தில் அரசு பள்ளி ஆண்டிபட்டி

ஆண்டிபட்டி அருகே உள்ள அரசு பள்ளியில் தரமற்ற கட்டடத்தில் அரசு பள்ளி.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியம் ஸ்ரீரெங்கசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட நாச்சியார்புரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது.

இப்பள்ளியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 8 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

பள்ளியிலிருந்த சமையல் அறை கட்டிடம் கடுமையாக சேதமடைந்ததால், புதிய சமையல் அறையும், பொருட்கள் வைப்பறை கட்டிடம் கட்ட கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3.70 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து கட்டிடமும் கட்டி முடிக்கப்பட்டது.

கட்டப்பட்ட புதிய சமையல் அறையில் மெயின் பெட்டி இருக்கு ஆனால் வயரிங் வேலை, மின் சப்ளை இல்லை. தண்ணீர் டேங்க் புதிதாக உள்ளது ஆனால் தண்ணீர் இல்லை. டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ள தரையில் பள்ளம் விழுந்துள்ளது.

மேலும் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி இல்லை. புதிய சமையல் அறையின் தரமற்ற கட்டுமான பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அரசு அலுவர்களிடம் பலமுறை புகார் கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கட்டி முடித்த பின்னர் சமையல் அறையின் சாவியை தலைமை ஆசிரியரிடம் சாவியை ஒப்படைத்தபோது அவர் சாவியை வாங்க மறுத்துவிட்டார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பள்ளியின் சுற்றுச்சுவர் தீடிரென சரிந்துவிழுந்தது. அப்போது பள்ளிக்கு விடுமுறை என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மேலும் சுற்றுச்சுவர் இல்லாததால் மர்மநபர்கள் பள்ளிக்குள் புகுந்து உபகரணங்களை திருடும் நிலை உள்ளது. பள்ளி வளாகத்தின் உள்பகுதியிலேயே சமையல் கழிவு பொருட்கள் மற்றும் உபகரணங்களை திறந்த வெளியில் போடுவதால் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தொற்று நோய்கள் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

மாவட்ட கலெக்டர் சம்மந்தப்பட்ட கல்வி, சுகாதாரத்துறை, வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி ஆசிரியர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், ‘பள்ளி வளாகத்தில் உள்ள பழைய பள்ளி கட்டிடம் ஒன்று கட்டி 1980ம் ஆண்டு திறக்கப்பட்டு தற்போது கட்டிடம் வலுவிழுந்து உள்ளது.

மேலும் மின் கம்பத்திலிருந்து வரும் மின் வயர்களும் சேதமடைந்துள்ளதால் கணினி, லைட்டுகள் அடிக்கடி பழுதடைகிறது. சேதமடைந்த கட்டிடத்தை இடிப்பதற்கும், பராமரிப்பு பணிகள் செய்வதற்கும் பலமுறை சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களிடம் புகார் கூறியும் செவிசாய்க்கவில்லை’ என்றனர்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments