தர்பூசணி எப்படி சாப்பிடுவது?

தர்பூசணி எப்படி சாப்பிடுவது

பழத்தின், சிவப்பு பகுதியை மட்டும், கத்தியால் செதுக்கி எடுத்து, முள் கரண்டியால் விதைகளை நீக்கி விட்டு, துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம். சிறிது உப்பும், மிளகுத்தூளும் அதன் மேல் தூவியும் சாப்பிடலாம்.

மிகவும் எளிமையான, புத்துணர்ச்சியூட்டும் பானமாகவும் தயாரிக்கலாம்.

விதை நீக்கப்பட்ட, தர்பூசணித் துண்டுகளை, மிக்ஸியில் போட்டு, ஒன்று அல்லது இரண்டு வினாடி ஓடவிட்டு, குளிர்பதனப் பெட்டியில் வைத்து பரிமாறலாம்.

தர்பூசணி எப்படி சாப்பிடுவது?

விருப்பமானால், சிறிது சர்க்கரை, எலுமிச்சம் பழச்சாறு, ஒன்றிரண்டு புதினாத் தழையும் சேர்க்கலாம்.

வெயில் காலத்தில் தர்பூசணி எப்படி சாப்பிடுவது?

வெப்பத்தை தணிக்க, இந்தப் பழத்தை வேண்டுமட்டும் உண்ணுங்கள்.

தோல், கொட்டை நீக்கிய தர்பூசணி துண்டுகள் – ஒரு கப், சோற்றுக் கற்றாழை ஜெல் – 2 டேபிள்ஸ்பூன் எடுத்து, கலந்து, முகத்தில் பூசி, 2 நிமிடம் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். முகம் மெருகேறி ஜொலிஜொலிக்கும்.

வயதாவதால் ஏற்படும் முகத் தொய்வை சீர் செய்கிறது தர்பூசனி.

உயர் ரத்த அழுத்தத்திற்கு தர்பூசணி

ஒரு கப்பில் தர்பூசணி ஜூஸை எடுத்து, அதில் பஞ்சை நனைத்து, பஞ்சால் முகத்தை ஒற்றி எடுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள்.

தினமும் இப்படிச் செய்து வர சருமத்தின் சுருக்கம் நீங்கும். இளமை திரும்பும். எண்ணெய்ப் பசை சருமத்தினர் அனைவருக்குமே ஏற்ற சிகிச்சை இது.

வறண்ட சருமத்தினருக்கு வேறு சிகிச்சை சொல்கிறேன்.. வாழைப் பழத் துண்டுகள் இரண்டுடன், 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது கலந்து நன்றாகப் பூசுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், சருமம் மிருதுவாகி மினுமினுக்கும்.

எண்ணெய்ப் பசை சருமத்தினர் 2 டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுது, ஒரு டீஸ்பூன் தயிர் கலந்து முகத்தில் தடவி வர, அதிகப்படியான எண்ணெய்ப் பசை ஓடியே போகும்.

தர்பூசணி மட்டுமல்ல.. அதன் விதையும்கூட அருமையான மருந்து! கூந்தலை பராமரிப்பதில் அதற்குப் பெரும்பங்கு இருக்கிறது.

அரை கிலோ நல்லெண்ணெயில் வெந்தய பவுடர் – 50 கிராம், தர்பூசணி விதை பவுடர் – 50 கிராம் கலந்து காய்ச்சுங்கள். இந்த எண்ணெயை தலைக்குத் தேய்த்து, சீயக்காய் போட்டு, வாரம் இருமுறை குளித்து வர, கண்டிஷனிங் செய்ததுபோல கூந்தல் பளபளக்கும்.

தர்பூசணி விதை எண்ணெயும் அற்புதமான மருந்துதான் (இது கடைகளில் கிடைக்கிறது) பிறந்த குழந்தையை இந்த எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி வர, சருமம் மெருகேறி ஜொலிக்கத் துவங்கும்.

கூந்தலின் வறட்சியைப் போக்கி, மிருதுவாக்குகிறது தர்பூசணி விதை.

சீயக்காய் – 100 கிராம், தர்பூசணி விதை – 100 கிராம். வெட்டிவேர் – 20 கிராம், பயத்தம்பருப்பு – 100 கிராம்.. இவற்றை உலர்த்தி, மிஷினில் கொடுத்து அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். வாரம் இருமுறை இந்த பவுடரால் தலையை அலசி வர, பட்டுப் போல மின்னும் கூந்தல்.

சிலருக்கு முகத்தில் பழுப்பு நிற மங்குகள் தோன்றி அழகை கெடுக்கும். இதற்கு நிரந்தரத் தீர்வைத் தருகிறது தர்பூஸ்.

ஒரு டீஸ்பூன் கடுகு பொடியுடன், ஒரு டீஸ்பூன் தர்பூசணி ஜூஸைக் கலந்து பூசினால்.. மங்குகள் உள்ள பகுதியில் தர்பூசணியின் சாறு ஊடுருவிச் சென்று, செயல்பட்டு மங்குகளை மறையச் செய்யும்.

உடலுக்குக் குளிர்ச்சியைத் தந்து ஒரு பாதுகாப்பு வளையமாகச் செயல்படுகிறது தர்பூசணி.

2 டீஸ்பூன் கடலை மாவு (அ) பயத்தமாவுடன் ஒரு டேபிள்ஸ்பூன் தர்பூசணி விழுதைக் கலந்து, முகம் மற்றும் உடலில் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வெயிலால் ஏற்படும் வேனல் கட்டிகள், கைகளின் கருமை, பருக்களைப் போக்கும் இந்த சிகிச்சை.

பித்தத்தைப் போக்கி பித்தப்பை கோளாறையும் நீக்கும். நல்ல பசியைத் தூண்டி விடும்.

இதில் இருக்கிற ‘வைட்டமின் டி’ சருமத்தை வெயிலிலிருந்து பாதுகாக்கும்.

ஜீரண சக்தியை அதிகரித்து, வயிறு எரிச்சல், வயிற்றுப் புண்ணை குணமாக்கும்.

இதில் ‘ஃபோலிக் ஆசிட்’ நிறைந்திருக்கிற இந்தப் பழத்தை, கர்ப்பிணிப் பெண்கள் அவசியம் சாப்பிட வேண்டும்.

இதயத்தைக் குளிரச் செய்து ரத்தக் குழாய்களில் இருக்கும் அடைப்பை போக்குகிறது. ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

தர்பூசணி கொட்டையை காய வைத்து உடைத்து, அதில் உள்ள பருப்பை சமையலில் பயன்படுத்தி வந்தால், வயிற்றிலுள்ள பூச்சி, கிருமிகள் ஓடியே போகும்.

மலச்சிக்கலைப் போக்கும் அருமருந்து இந்த தர்பூஸ்.

இதில் 90 சதவிகிதம் நீர் சத்தும் 3.37 சதவீதம் நார்ச் சத்தும் உண்டு. தவிர இரும்பு சத்து, தாது உப்புகள், சுண்ணாம்பு சத்து பாஸ்பரஸ் போன்றவைகள் சிறிய அளவில் கொண்டது.

இது வைட்டமின் சி, பி. ஆகியவைகளுடன் நியாசினும் உண்டு. உடல் உஷ்ணத்தைத் தனித்து மனதை அமைதிப்படுத்தும் தன்மை உண்டு. பசியை அடக்க வல்லது இது, சிறுநீரை நன்கு பிரிய வைக்கும்.

அடி வயிறு சம்பந்தமான கோளாறுகளுடன் வயிற்று வலியையும் இது குணப்படுத்தும். இளமையையும் அழகையும் கூட்டக் கூடியது தர்பூசணி.

பழத்தை அப்படியே சாப்பிட பிடிக்காதவர்கள், அதனை ஜூஸ் போன்று செய்து குடிக்கலாம். மேலும் அதிக பசியுடன் இருப்பவர்களோ அல்லது டயட்டில் இருப்பவர்களோ, தர்பூசணி ஜூஸை குடித்தால், பசி அடங்கிவிடும்.

மேலும் உடல் எடையை குறைக்க நினைப்போருக்கும், கர்ப்பிணிகளுக்கும் இந்த ஜூஸ் சிறந்தது.

உயர் ரத்த அழுத்தத்திற்கு தர்பூசணி

விதை – தர்பூசணி எப்படி சாப்பிடுவது?

நாம் பழங்களை மட்டும் சாப்பிட்டு விதைகளை தூக்கி எறிந்து விடுகிறோம்.விதைகளையும் சேர்த்து சாப்பிட வேண்டும்.என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

அது தான் உண்மையும் கூட.இப்பழத்தின் விதை வெள்ளரி விதையின் சுவையில் இருக்கும்.

தினமும் தர்பூசணி ஜூஸ் குடித்தால், அவை உடலை வறட்சியின்றி வைப்பதோடு, சருமத்தை பொலிவோடு வைப்பதற்கும் உதவும்.

எனவே இத்தகைய தர்பூசணியை அப்படியே சாப்பிடவோ அல்லது அதனை முகத்தை பொலிவாக்கவோ பயன்படுத்தலாம்.

சருமத்திற்கு தர்பூசணியை பயன்படுத்தினால், அப்படி என்ன நன்மை கிடைக்கும்?

தர்பூசணி ஒரு நேச்சுரல் டோனர். ஏனெனில் இந்த சிவப்பு நிறப் பழத்தின் சாற்றை முகத்திற்கு தடவினால், முகம் நன்கு பொலிவாகும்.

அதிலும் அந்த பழத்தின் ஒரு துண்டை, தேனில் நனைத்து, முகத்தில் சிறிது நேரம் தேய்த்தால், சருமம் நன்கு பொலிவோடு காணப்படும்.

தர்பூசணியில் லைகோபைன், வைட்டமின் சி மற்றும் ஏ அதிகம் உள்ளது. எனவே இதன் சாற்றை சருமத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கோடுகள் மற்றும் முதுமை தோற்றம் விரைவில் வருவது போன்றவற்றை தடுக்கும்.

மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தில் உள்ள பாதிப்படைந்த செல்களை சரிசெய்துவிடும். எனவே அதற்கு தர்பூசணியை சருமத்தில் தடவலாம். இல்லையெனில் அதனை சாப்பிடலாம்.

இந்த தகவல் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் இந்த பதிவை பகிர்ந்து உதவுங்கள்.

மேலும் இது போன்ற தகவல்களுக்கு எங்களுடைய தமிழ்நாடு பேஸ் புக் பக்கத்தில் இணைந்திடுங்கள்.

Comments

comments