தீபாவளிக்கு 108 ஆம்புலன்ஸ் ஓடுமா ஓடாதா?

தீபாவளிக்கு 108 ஆம்புலன்ஸ் ஓடுமா ஓடாதா?

இருபத்தியேழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீபாவளிக்கு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவிருக்கின்றனர்.

தீபாவளிக்கு 25 சதவிகித போனஸ் வழங்குதல் உட்பட இருபத்தியேழு அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வற்புறுத்தியுள்ளனர்.

ஆனால், இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற மறுத்துள்ளதால் அக்டோபர் 28 இரவு 8 மணி முதல் 29 ஆம் தியதி இரவு 8 மணி வரை தமிழகம் முழுவதும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு ‘108’ நலச்சங்க தலைவர் இருளாண்டி தெரிவித்துள்ளார்.

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments