உயர் ஜாதியினரிடமிருந்து பாலியல் மிரட்டல்!

தேசிய அளவிலான கபடி வீராங்கனை வீராங்கனைக்கு உயர் ஜாதியினரிடமிருந்து பாலியல் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

பாட்னாவிலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் யாதவ் இனத்தை சேர்ந்த கபடி வீரங்கனை பல்வேறு கபடி போட்டிகளில் சாதனை படைத்துள்ளார்.

ஆனால் அதே பகுதியை சேர்ந்த உயர் ஜாதி வகுப்பினருக்கு இந்த வீராங்கனை சாதிப்பது பிடிக்கவில்லை.

மேலும் உயர் ஜாதியினரால் கபடியில் சாதிக்கவும் இயலவில்லை. இது அவர்களுக்கு அவமானமாக உள்ளது.

எனவே அந்த பிற்படுத்தப்பட்ட ஜாதியை சேர்ந்த வீராங்கனையை வன்புணர்வு செய்துவிடுவோம் எனவே எந்த போட்டியிலும் பங்கேற்காமல் விலக வேண்டும் என்று உயர் ஜாதியினரிடமிருந்து மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த வீராங்கனை தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பே புகார் அளித்தும் காவல்துறை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments