தேனில் ஊற வைத்த பூண்டில் இருக்கும் அற்புதங்கள்!

தேனில் ஊற வைத்த பூண்டில் இருக்கும் அற்புதங்கள்!

6
0

தேன் மற்றும் பூண்டில் நிறைய மருத்துவக்குணங்கள் இருக்கின்றன.

முன்பெல்லாம் பல உடல்நலப் பாதிப்புகளுக்கு பூண்டு மற்றும் தேனை மருத்துவப் பொருளாக பயன்படுத்தியுள்ளனர்.

அதிலும், இதயம் மற்றும் இரத்த அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு அதிகமாக பயன்படுத்துவார்கள். இதைப்பற்றிய சின்ன விஷயம் ஒன்றை  பார்ப்போம்.

தனித்தனியாக தோல் உரித்து எடுக்கப்பட்ட

பூண்டு- 20.

தூய்மையான தேன் – ஓர் ஜாடி அளவு

பூண்டு நன்கு மூழ்கும் அளவிற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்

பூண்டை ஜாடியில் போட்டு, அதன் மேல் பூண்டுகள் அனைத்தும் நன்கு மூழ்கும் அளவிற்கு தூய்மையான தேனை ஊற்றி ஊற வைக்கவும். ஒரு வாரக் காலம் இதை ஊற விடுங்கள். (ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி வந்தால் ஒரு வருடம் வரை இது கொட்டுப்போகவே செய்யாது).

சளி, காய்ச்சல், இருமல், நோய் கிருமி தொற்று போன்றவை ஏற்படாமல் இருக்க சிறந்த மருந்தாக இந்த தேனில் ஊற வைத்த பூண்டு பயனளிக்கிறது.

தினமும் காலை வெறும் வயிற்றில் அரை டீஸ்பூன் அளவு உட்கொண்டால் போதுமானது.

ஒரு நாளுக்கு ஐந்தில் இருந்து ஆறுமுறை இதை அரை டீஸ்பூன் அளவில் உட்கொள்ளலாம்.

உணவு உண்ட பிறகு இதை உட்கொள்வது, இதன் செயலாற்றலை குறைத்துவிடும்.

எனவே தான் காலையில் எழுந்ததும் உட்கொள்ள கூறப்படுகிறது. பிறகு நண்பகல், மாலை வேளையிலும் கூட இதை உட்கொள்ளலாம்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments