நகம் கடிக்கும் பழக்கம் – தவிர்ப்பது எப்படி ?

நீங்களோ அல்லது உங்களின் நண்பரோ உறவினரோ யாரேனும் வருடக் கணக்கில் நகம் கடிக்கும் பழக்கம் இருக்கக் கூடும்.

அமெரிக்க மனோதத்துவ கூட்டமைப்பு இந்த நகம் கடிக்கும் பழக்கம் பற்றி தன்னுடைய மனோதத்துவ மாத இதழில், இப் பழக்கத்தை ஒரு மனோ தத்துவத்துடன் தொடர்புடைய ஒரு வித மன நோயாகவே பார்க்கிறது.

இந்த நகம் கடிக்கும் பழக்கம் தேவையற்ற எண்ணங்கள், எதிர்மறை பயம் போன்ற திரும்ப திரும்ப நிகழும் எதிர்மறை எண்ணங்கள் வாயிலாக அதிகரிக்கக் கூடும்.

தோலைத் தடவிக் கொண்டே இருப்பது, முடியை சுழற்றி கொண்டே இருப்பது போன்றதல்லாமல் இந்த நகம் கடிக்கும் பழக்கம் நமது உடல் நலத்துடன் ஒரு தவிர்க்க இயலா தொடர்பைக் கொண்டுள்ளது.

அதிகம் நகம் கடிப்பதால் விரல்களின் முடிவில் உள்ள சதைப் பகுதி பாதிக்கப்பட்டு நோய் மற்றும் தொற்று நோய்கள் வரக் காரணமாக அமைகின்றது.

உடல் நோய்எ திர்ப்பு சக்தி குறைந்து உடல் பாதிப்படைந்து நோய்கள் ஏற்பட எளிதில் காரணமாகும்.

பாரனைஷியா என்று அறியப்பட்டு வரும் தோல் நோய் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

நம்முடைய நகங்களில் இருக்கும் பாக்டீரியா, ஈஸ்ட், நுண்ணுயிரிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நகங்களின் மேல் தோலை சிவப்பாக்கி, தடித்து வீங்க வைத்துவிடும்.

இந்த பழக்கத்தினால் நாளடைவில் நகக் கண் பகுதிகளில் சீழ் கட்ட வாய்ப்பிருக்கிறது.

நகங்களை கடிக்கும் பழக்கம் இருப்பவர்கள், அந்த நகங்களை பல சமயங்களில் விழுங்குகிறார்கள். இப்படி விழுங்குவதால், செரிமான அமிலத்தால் அவை செரிமானமாகால், வயிற்றில் அவை அப்படியே தங்கி, அதுவே பெரும் பிரச்சனையை ஏற்படுத்தும்.

மேலும் கண்ட கண்ட இடங்களில் கைகளை வைத்துவிட்டு, ஏதேனும் யோசிக்கும் போதோ அல்லது டென்சனாக இருக்கும் போது, அப்படியே கையை வாயில் வைப்போம்.

இதனால் வயிற்றில் பல பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். மற்றும் பற்கள் தொடர்ந்து பற்களால் நகங்களை கடிக்கும் போது, அது பற்களின் எனாமலை பாதித்து, பற்களை வலிமையிழக்கச் செய்துவிடும்.

எனவே நகங்கள் கடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால், விரைவில் பற்களையும் இழக்க நேரிடும்.

Read more at: http://tamil.boldsky.com/health/wellness/2015/health-effects-nail-biting-007340.html

தோல் வியாதிகள், நகக் கண் நோய், சளி போன்ற எளிதில் தோற்றக் கூடிய வியாதிகள் மற்றும் நமது வாய் மற்றும் மூக்கு வலி தொற்றக் கூடிய நோய்கள் வரவும் காரணமாக அமைந்து விடுகிறது.

நகம் கடிக்கும் பழக்கம் – எப்படி விடுவது ?

1. நம்மை அறியாமலே நகம் கடிப்பதை தடுப்பது
2. ஒரே சீராக நகத்தை வெட்டி பராமரிப்பது
3. களிம்பு வகைகள் உபயோகிப்பது
4. மன அழுத்தம் மற்றும் மனப் பதற்றம் தவிர்ப்பது.

இந்த பழக்கத்தை சிறுவயதிலேயே நிறுத்திவிட்டால், பிற்காலத்தில் உடலில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.

இந்த பழக்கத்தை உடனே நிறுத்த முடியாவிட்டாலும், அதனை நிறுத்த முயற்சிக்க வேண்டும்.

முடிவாக,

நோயற்ற, மருத்துவற்ற, இயற்கை வாழ்வியல் வாழ வேண்டும் என்னும் நேர்மறை எண்ணத்துடன் அனைவருக்கும் நம்மால் ஆனா உதவிகள் செய்து வாழ்வோம்.

வாழிய செந்தமிழ், வாழிய பாரதம் வாழிய எங்கள் தமிழ்த் திரு நாடு.

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் இதை உங்களின் நட்பு மற்றும் உறவு வட்டங்களுடன் பகிர்ந்து உதவுங்கள்.

Comments

comments