நடிகர் தனுஷ் வழக்கில் திடீர் பரபரப்பு

நடிகர் தனுஷின் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

 

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என கோரி கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் மேலூர் நீதிமன்றத்தில் வழக்கு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி தனுஷ் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு செய்துள்ளார்.

இவ்வழக்கில் நடிகர் தனுஷ் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார். மேலும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இந்நிலையில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் நடிகர் தனுஷ் உடலில் சில அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை வழியே அழிக்கப்பட்டுள்ளன என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மருத்துவமனை டீன் முன்னிலையில் 2 மருத்துவர்கள் இந்த அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இதனை அடுத்து வரும் 27ந்தேதிக்கு விசாரணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ஒத்தி வைத்துள்ளது.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments