நாங்கள் நேர்மையானவர்கள்.தமிமுன் அன்சாரி தகவல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு வெற்றிபெறுவதற்கு எம்எல்ஏக்களிடம் குதிரைப் பேரம் நடத்தப்பட்டது என்று ஓபிஎஸ் அணியில் இருக்கும் எம்எல்ஏ சரவணன் பேசுவது போன்ற வீடியோ காட்சிகள் ஆங்கில தொலைக்காட்சியில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வீடியோவில் கருணாஸ் மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோருக்கு ரூ.10 கோடி அளிக்கப்பட்டதாக சரவணன் பேசும் காட்சிகள் அடங்கிய காட்சிகள் இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த போது தொகுதியின் பிரச்சனைகள் பற்றி மட்டும் பேசினோம். மற்றபடி எதுவும் இல்லை.

பணம் சம்பந்தமான அரசியலில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று அமைச்சர் செங்கேட்டையனிடம் நாங்கள் கூறினோம். அதற்கு அவர் உங்களைப் பற்றி எனக்குத் நன்றாகத் தெரியும். உங்கள் கோரிக்கையை மட்டும் சொல்லுங்கள் எனக் கூறினார்.

எங்கள் மீது எந்தத் தவறும் இல்லை நாங்கள் களங்கமற்றவர்கள், நேர்மையானவர்கள். எங்கள் மீது இது போன்ற தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி உயிரோடு கல்லறை கட்டிவிடாதீர்கள்.

எந்த பணமும் வாங்கவில்லை தொகுதியின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காகவே நாங்கள் ஆதரவு தந்தோம். வீடியோ வெளியானது பற்றி எம்.எல்.ஏ. சரவணனே என்னிடம் மறுப்பு தெரிவித்துள்ளார்.

ஆதாரம்

செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments