நெல்லித்தோப்பு தொகுதி தேர்தல்

நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று துவங்குகிறது. நவ.5ம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி போட்டியிடுவதற்கு வசதியாக நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ., ஜான்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார். இத்தொகுதியில் நவ., 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இத்தேர்தலில் போட்டியிட இன்று (29ம் தேதி) துவங்கி, நவம்பர் 2ம் தேதி வரை வேட்புமனு தாக்கல் செய்யலாம்.

தட்டாஞ்சாவடி தொழில் மற்றும் வணிக துறை அலுவலகத்தில் காலை 11.௦௦ மணி முதல் மாலை 3.௦௦ மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும்.

தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

நெல்லித்தோப்பு தொகுதி:-

இயந்திரங்கள் சோதனை இந்நிலையில், ரெட்டியார்பாளையம் தேர்தல்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முதற்கட்ட பரிசோதனை, வடக்கு துணை மாவட்ட ஆட்சியர் தில்லைவேல் தலைமையில், அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று நடந்தது.

காங்., பிரதிநிதி சிவசாமி, தி.மு.க., சார்பில் ஸ்ரீதர், பா.ஜ., சார்பில் முருகன், அ.தி.மு.க., சார்பில் அந்துவான், என்.ஆர்.காங்., சார்பில் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்றனர்.
இயந்திரங்களின் செயல்பாடு குறித்து சோதனை செய்யப்பட்டது.

100 இயந்திரங்களில், 5 இயந்திரங்கள் தேர்வு செய்து அதில் 1000 ஓட்டுகள் பதிவு செய்து, சரியாக ஓட்டு பதிவு நடக்கிறதா என ஆய்வு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மீண்டும் இயந்திரங்கள் அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.

இரண்டாவது கட்டமாக 26 ஓட்டுச்சாவடிக்கு 26 மற்றும் பழுது உள்ளிட்ட காரணங்களுக்காக மாற்றுவதற்காக 4 என மொத்தம், 30 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தேர்வு செய்யப்படும்.மூன்றாவதாக, அனைத்து கட்சியினர் முன்னிலையில் ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் சின்னங்கள் பதித்து, 26 ஓட்டுச்சாவடிகளுக்கும் மின்னணு இயந்திரம் தேர்வு செய்து அனுப்பட உள்ளது.

பறக்கும் படை அமைப்புதேர்தல் நடத்தும் அதிகாரி மலர்க்கண்ணன் கூறுகையில்,’ நெல்லித்தோப்பு தொகுதி வேட்பு மனுத்தாக்கல் நாளை (௨௬ம் தேதி) துவங்கி, நவம்பர் ௨ம் தேதி வரை நடக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிக்கு ஒருவரும், மற்றவர்களுக்கு 10 பேர் மனுவை முன்மொழிய வேண்டும்.

வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.நெல்லித்தோப்பு பகுதியை மூன்று பிரிவுகளாக பிரித்து, மூன்று தேர்தல் துறை சிறப்பு கண்காணிப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் ஓட்டுச்சாவடிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வர். தேர்தலில் விதிமுறைகள் மீறி முறைகேடுகள் நடைபெறாமல் இருக்க 6 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது’ என்றார்.-நமது நிருபர்-

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments