பசுக்களை வெட்டுபவர்கள் கை கால்கள உடைப்போம்

பசுக்களை வெட்டினால் கை கால் உடையும் என்று உத்திர பிரதேச பா.ஜ.க.எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

 

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக எம்எல்ஏ விக்ரம் சைனி யாரேனும் பசுக்களை கொன்றாலோ, அல்லது அவமரியாதை செய்தாலோ அவர்களின் கை, கால் உடைக்கப்படும் என பேசினார். 

விகரம் சைனி உத்தரப்பிரதேசத்தில் முஷாபர் நகர் கலவரத்தின் போது சர்ச்சைக்குரிய விதத்தில் பேசிய சிறை சென்றுள்ளார்.

இந்நிலையில் மீண்டும் இதுபோன்ற சர்ச்சை கருத்தை வெளியிட்டுள்ளதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைந்தது முதல் இறைச்சிக் கடைகள் அரசால் மூடப் படுவதும், சமூக விரோதிகளால் கொளுத்தப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பாஜக எம்.எல்.ஏ இவ்வாறு கருத்தை வைத்துள்ளது குறிப்பிடத்தகக்து.

ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

 

Comments

comments