அஸ்ஸாமில் பசுவை திருடியதாகக் கூறி இரண்டு முஸ்லிம்கள் படுகொலை

பசுவை திருடியதாகக் கூறி இரண்டு முஸ்லிம்களை பசு பாதுகாப்புப் படை என்று கூறிக்கொள்ளும் வன்முறை கும்பல் படுகொலை செய்துள்ளது.

அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் அபூ ஹனிபா மற்றும் ரியாசுத்தீன் என்ற இருவர் பசுவை திருடினார்கள் என்று கூறி அவர்களை துரத்திச் சென்று ஒரு கும்பல் தாக்கியுள்ளது.

அது தாங்கள் பசு பாதுகாப்புப் படையினர் என்று கூறியுள்ளது. இதில் படுகாயமடைந்த இருவரும் பரிதாபமாக பலியானார்கள்.

மோடி அரசு பதவியேற்றதிலிருந்து ஒருவித பதற்றத்திலேயே இதியா உள்ளது என்றும் குறிப்பாக முஸ்லிம்களை ஏதேனும் ஒரு வகையில் தாக்கி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் பதிவிட்டு வருகின்றன.

பாஜகவின் பெரும் புள்ளிகளே மாடுக்கறி ஏற்றுமதியில் முதன்மையாக இருக்கும் நிலையில் ஆனால் பாஜக பசு பாதுகாப்பு என்ற பெயரில் முஸ்லிமகளை தாக்கி வருதன் மூலம் அதன் இரட்டை வேடத்தினை பலரும் அறிந்து வந்துள்ளனர்.

கடந்த மாதம் ராஜஸ்தானில் பால் வியாபாரி ஒருவர் பசுவை கடத்தினார் என்று கூறி கடும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு பலியானமை குறிப்பிடத்தக்கது.<
ஆதாரம்

தமிழக செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள கீழே உள்ள எங்கள் பேஸ்புக் பக்கத்தில் இணையுங்கள்.

Comments

comments